சீமான் மீது ஆக்சன் எடுக்கலாமா? சென்னைக்கு திரும்பியதும்.. விஜய் கேட்ட கேள்வி.. பயங்கர பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில், தொடர் பிரச்சாரங்களை முடித்துக் கொண்டு முதலமைச்சர் விஜய் நேற்று இரவு சென்னை திரும்பினார். தீவிர தேர்தல் பயணங்களால் ஏற்பட்ட களைப்பு காரணமாக இரவில் ஓய்வு எடுத்த அவர், இன்று காலையிலேயே சுறுசுறுப்பாக தனது அன்றாட பணிகளைத் தொடங்கினார்.

விடியற்காலையிலேயே எழுந்த முதல்வர், தனது வழக்கமான உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு உடனடியாக ஆட்சிப் பணிகளில் கவனம் செலுத்தினார். தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளரை நேரில் அழைத்து, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு விவகாரங்கள் மற்றும் அரசின் முக்கிய நிர்வாகப் பணிகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.

seeman vijay tvk

"தொய்வே இருக்கக் கூடாது" - முதல்வர் உத்தரவு

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மிக முக்கியமான விஷயமாகப் பேசப்பட்டது முந்தைய திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் ஏ.வ.வேலு ஆகியோர் மீதான விவகாரம்தான். இவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள ஊழல் வழக்குகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து முதல்வர் விஜய் அதிகாரிகளிடம் நேரடியாகக் கேட்டறிந்தார்.

அதிகாரிகள் அந்த வழக்குகளில் இதுவரை திரட்டப்பட்டுள்ள ஆவணங்கள், சாட்சியங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சருக்கு விரிவான விளக்கம் அளித்தனர். அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த முதல்வர் விஜய்,

"ஊழல் வழக்குகளில் எந்தவிதமான சுணக்கமோ, காலதாமதமோ ஏற்படக் கூடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி அடுத்தகட்ட நகர்வுகளைத் துரிதப்படுத்துங்கள்"

என்று மிகத் தீர்க்கமாக அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் முந்தைய ஆட்சியாளர்களின் ஊழல் வழக்குகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது உறுதியாகியுள்ளது.

ஸ்டாலின், உதயநிதி மீது தேர்தல் வழக்குகள்

இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசிய விவகாரங்களும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, தேர்தல் விதிமுறைகளை மீறிப் பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது ஏற்கனவே காவல் துறையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளின் நிலை குறித்தும் அதிகாரிகள் முதல்வரிடம் தெரிவித்தனர்.

"சீமானை கைது செய்து பெரிய ஆளாக்க வேண்டாம்"

அதே சமயம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பிரச்சாரக் கூட்டங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசிய சில கருத்துகள் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறைக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்துள்ளன.

இதனைச் சுட்டிக்காட்டிய காவல்துறை மற்றும் உள்துறை உயரதிகாரிகள், "சீமான் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கலாமா?" என்று முதலமைச்சர் விஜய்யிடம் கருத்து கேட்டுள்ளனர்.

அதற்கு மிக அமைதியாகவும் சாதுரியமாகவும் பதிலளித்த முதல்வர் விஜய்,

"சீமான் மீது இப்போதைக்கு அவசரப்பட்டு எந்தக் கைது நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். நம்மை கைது செய்ய வைக்க வேண்டும் என்றுதான் அவர் இப்படி ஆவேசமாகவும் சர்ச்சையாகவும் பேசி வருகிறார். அவரை இப்போது கைது செய்து அவருக்கு தேவையில்லாத அரசியல் விளம்பரத்தைக் கொடுத்து பெரிய ஆளாக மாற்ற வேண்டாம். அதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது"

என்று தெளிவாகக் கூறிவிட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்ந்து முடித்துவிட்டு வந்த போதிலும், ஊழல் விவகாரங்களில் சமரசமின்றி வேகம்காட்டி, அதே நேரத்தில் அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகளின் தந்திரங்களுக்குப் பலியாகாமல் நிதானம் காட்டும் முதல்வர் விஜய்யின் இந்த அணுகுமுறை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+