மிசா பற்றி பேசும் போது கொடுத்த ரியாக்‌ஷன்.. உருவக்கேலி செய்தாரா முதல்வர் விஜய்? எழும் கடும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் விஜய் இன்று சட்டசபையில் திமுகவை கடுமையாக விமர்சித்தார். மிசா குறித்தும் முதல்வர் விஜய் பேசினார். அப்போது முதல்வர் விஜய் செய்த சைகை, உருவக்கேலி செய்யும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. சட்டசபையில் அவை மாண்புடன் முதல்வரின் உடல்மொழி இல்லை எனவும் காட்டமாக பலரும் பதிவிட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் முதல்வர் உள்நோக்கத்துடன் அப்படி செய்து இருக்க வாய்ப்பு இல்லை என மற்றொரு தரப்பினரும் பதிவிட்டு வருகிறார்கள்.

தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதிலளித்து பேசினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிய முதல்வர் விஜய், ஆக்ரோஷமாக பேசினார். சட்டம் ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து பேசிய முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

TN CM Vijay reaction In assembly while speaking about MISA Sparks fierce criticism among Netizens

மிசாவை பார்த்தவங்க..

இன்று எங்கள் அரசியல் பாரம்பரியம் பற்றி தெரியுமா? என்று தெரிபவர்களுக்கு அவர்களை பற்றி மக்களுக்கு தெரிய வைக்க வேண்டாமா? எது பேசுனாலும் நாங்கள் மிசாவை பார்த்தவங்க.. மிசாவை பார்த்தவங்க என்று.. எல்லாவற்றிற்கும் மிசாவை கொண்டு வந்து விட்டால் என்ன செய்றது என்று தெரியல.. அய்யா பெரியவர்களே எல்லாருக்கும் அந்த மிசாவை பற்றிய வரலாறு எல்லாருக்கும் நல்லா தெரியும்.

நடந்தது.. நடக்கிறது.. நடக்கப் போவது.. எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்களை விடவா நாம இவுங்களை கமெண்ட் பண்னிட போறோம். கவிஞர் கண்ணதாசன் திமுகவை பற்றி ஷார்ட் & ஸ்வீட் ஆக ஒன்னு சொன்னார். பேசிப் பழகிய பொய், வாங்கி பழகிய கை, போட்டு பழகிய பை.. இதுதான் திமுக.. இவ்வளவுதான் திமுக.. ஒன்னே ஒன்னு சொல்லனும் என்று ஆசைப்படுகிறேன். நம்முடைய அரசு யாருக்கும் தனிப்பட்ட அடையாளமாக எப்போதுமே இருக்காது.

விஜய் செய்த ரியாக்‌ஷன்

நம்முடைய அரசின் அடையாளம் தமிழ், தமிழர், தமிழ்நாடு அவ்வளவுதான்.. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தமிழ்நாடுதன் என் வீடு.. எட்டு கோடி மக்கள்தான் என் சொந்தங்கள்.. அந்த எட்டு கோடி பேருக்கும் சொந்தமாகத்தான் நமது அரசு எப்போதும் இருக்கும்" என்று ஆவேசமாக பேசினார். முன்னதாக மிசா பற்றி பேசும் போது, முதல்வர் விஜய் கொடுத்த ரியாக்‌ஷன் என்று கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

அதாவது முதல்வர் விஜய் தனது கையை முகத்தின் அருகே கொண்டு போய், சைகை ஒன்றை காட்டினார். இது உருவக்கேலி செய்யும் வகையில் இருப்பதாக விஜய்க்கு எதிராக கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபையில் முதல்வர் விஜய்யின் இந்த செய்கை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

நெட்டிசன்கள் விமர்சனம்

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலினை கேலி செய்யும் விதமாகவே முதல்வர் விஜய், அத்தகைய செய்கையை காட்டியிருப்பதாகவும், பிறருக்கு அட்வைஸ் செய்யும் விஜய், சட்டசபையில் மாண்பை கடைப்பிடித்து, தனது பதவிக்குரிய கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் எனவும் பலரும் காட்டமாக பதிவிட்டு வருகிறார்கள்.

அதேவேளையில், முதல்வர் விஜய் எதேச்சையாக இந்த சைகையை காட்டியிருக்கலாம் எனவும் உருவக்கேலி செய்யும் நோக்கில் அவர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை எனவும் மற்றொரு தரப்பினர் பதிவிட்டு வருகின்றனர். முதல்வர் விஜய்யின் இன்றைய உரையும் அவரது உடல்மொழியும் சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் விவாதப்பொருளாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+