சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒன்றிய அரசின் முடிவிற்கு வரவேற்பு.. வேக்சின் செலுத்தும் உரிமையை மாநில அரசுக்கு வழங்குக - முதல்வர்

Google Oneindia Tamil News

சென்னை: மாநிலங்களுக்கு இலவசமாக வேக்சின் வழங்கும் முடிவை வரவேற்கிறேன், அதே சமயம் வேக்சின் ரிஜிஸ்டிரேஷன், விநியோகம் உள்ளிட்டவற்றில் மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

TN CM welcome Union government decision on vaccine policy asks for state control on administration

பிரதமர் மோடி நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக வேக்சின் கொடுப்பதாகவும், இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை விநியோகிக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேக்சினில் 75% மத்திய அரசு மூலம் வாங்கப்பட்டு மாநில அரசுகளுக்கு தரப்படும். ஜூன் 21 முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் அறிவிப்பை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மாநிலங்களுக்கு இலவசமாக வேக்சின் வழங்கும் முடிவை வரவேற்கிறேன் இந்தியாவில் உற்பத்தியாகும் 75% வேக்சினை வாங்க ஒன்றிய அரசே முடிவு வரவேற்க கூடியது. வேக்சின் தொடர்பான முந்தைய நிலைப்பாட்டை பிரதமர் மோடி மாற்றிக்கொண்டதை பாராட்டுகிறேன்.

வெளிநாடுகளிலிருந்து வேக்சின் வாங்க முடிவு.. சோதனை நிலையில் மேலும் 3 தடுப்பூசிகள்.. பிரதமர் பேச்சு! வெளிநாடுகளிலிருந்து வேக்சின் வாங்க முடிவு.. சோதனை நிலையில் மேலும் 3 தடுப்பூசிகள்.. பிரதமர் பேச்சு!

அதே சமயம் சுகாதாரத்துறை என்பது மாநில கட்டுப்பாட்டிற்கு கீழ் வர கூடியது. இதை பிரதமரே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இதனால் வேக்சின் ரிஜிஸ்டிரேஷன், மக்களுக்கு நேராக விநியோகம் செய்வது உள்ளிட்டவற்றில் மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் வழங்குவதுதான் சரியாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Tamilnadu CM M K Stalin welcome Union government decision on vaccine policy asks for state control on administration procedures of the vaccination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X