கணினி பாடத்தை உருவாக்கிய இதயம் நின்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது.. ஆசிரியர் சங்கம் அஞ்சலி!
சென்னை: கணினி பாடத்தை உருவாக்கிய இதயம் நின்று மூன்றாண்டுகள் ஆகி விட்டது-ஒப்பற்ற தலைவருக்கு கணினி ஆசிரியர்கள் குடும்பத்தினர் சார்பாக நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அரசுப் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய அரசு மாணவர்களுக்கு கணினி கல்வி தந்த கலைஞர்...அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்து மேல்நிலைப்பள்ளிகளில் 1998ம் ஆண்டு கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வந்தவர் கலைஞர்..
அரசுப் பள்ளிகளில்தான் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்கிறது.
அப்படி இருக்கும்பொழுது கிராமப்புற ஒடுக்கப்பட்ட, ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்குக் கணினிக் கல்வி அவசியம் என எண்ணி அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய கணினி அறிவியல் பாடத்திற்கு ஒளியேற்றி தந்தவர் இன்று உறங்குகிறார்.

சமச்சீரில் கணினி பாடம்...
தமிழகத்தில் கடந்த 2009 -ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மாண்புமிகு கலைஞர் அவர்களால் சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது 6ம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்புகளில் வரை சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இலவச கணினி அறிவியல் கல்வி அறிவிக்கும் வகையில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. 2011-12 கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. அதே ஆண்டின் மே மாதம்
6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சுமார் 28 லட்சம் மாணவர்களுக்கு ரூ.150 கோடியில் அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் ஆட்சி மாற்றம் காரணமாக இன்று வரை கிடங்குகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.
சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டதால் பி.எட் கணினி ஆசிரியர் படிப்பை முடித்த சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அரசுப்பள்ளிகளில் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், அரசுப்பள்ளிகளில் பி.எட் படித்த கணினி ஆசிரியர்களுக்கு பகுதி நேர வேலை கூட கிடைக்கவில்லை.
ஆசிரியர்கள் செஞ்சோற்றுக் கடன் நன்றியுடன் நினைவஞ்சலி செலுத்த வேண்டிய ஓர் தலைவன் அஸ்தமித்து விட்ட தினம் இன்று..

"அறிக்கை தந்த சூரியனுக்கு"
அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று 2016ஆம் ஆண்டு பத்திரிக்கை செய்திகள் அறிக்கை வெளியிட்டார் .
கணினி ஆசிரியர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கலைஞர் மறைந்தது பேரிழப்பே...
கணினி ஆசிரியர்கள் மட்டுமன்றி ஆசிரிய சமுதாயத்தைச் சேர்ந்த அத்தனை குடும்பங்களுக்கும் மீட்க முடியாத இழப்பு..
மாண்புமிகு கலைஞர் ஐயா அவர்களின் நினைவாக சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஐயா அவர்களும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஐயா அவர்களும் கணினி பாடத்தை அரசுப்பள்ளியில் உருவாக்கிட இந்நாளில் வேண்டுகிறோம்.
என்றும் நன்றியுடன் வெ.குமரேசன், மாநிலப் பொதுச் செயலாளர், மற்றும் உறுப்பினர் தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் என அறிக்கை வெளியிட்டு கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications