வேகமாக பரவும் ஜோதிட வைரஸ்.. விஜய்யை பின்பற்றி அலுவலகத்தை மாற்றி அமைக்கும் மாணிக்கம் தாகூர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய்யை பின்பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தன்னுடைய அலுவலகத்தையும் வாஸ்து படி மாற்ற முடிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. சத்தியமூர்த்தி பவனில் தரைத்தளத்தில் உள்ள மாநிலத் தலைவருக்கான அறையை, மாணிக்கம் தாகூர் வாஸ்து படி 2வது தளத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளார்.

தமிழக அரசியலில் புதிதாக ஜோதிட வைரஸ் ஒன்று பரவி வருகிறது. ஜோதிடம் மற்றும் வாஸ்து பார்த்து அரசியல் கட்சியினர் தங்களின் முடிவுகளை எடுத்து வருகின்றனர். அதேபோல் தங்களின் அலுவலகங்களை மாற்றி அமைத்து வருகின்றனர். இதில் முதலிடத்தில் இருப்பது முதல்வர் விஜய் தான். தேர்தல் முடிவுகளுக்கு முன் கூட்டியே பல்வேறு கோயில்களுக்கு சென்று வந்தார்.

Manickam Tagore

அதன்பின் ஜோதிடர் சொல்லும் நிறத்தில் உடை அணிய தொடங்கினார். தற்போது வாஸ்து படி தலைமைச் செயலகத்தில் இருந்து தன்னுடைய அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றி இருக்கிறார். முதல்வர் விஜய்யின் இந்த ஜோதிட மற்றும் வாஸ்து வைரஸ் மற்றவர்களுக்கும் பரவ தொடங்கி இருக்கிறது.

ஏனென்றால் முதல்வர் விஜய்யை பின்பற்றி தனது அறையை வாஸ்துபடி மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர். தமிழக காங்கிரஸின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில், கீழ்த்தளத்தில் மாநில தலைவருக்கான விசாலமான அறை இருக்கிறது.

வாஸ்து விசயத்தில் முதல்வர் விஜய் கவனமாகவும் உன்னிப்பாகவும் இருப்பதால் அதனை பின்பற்றி தனது அறையின் அமைப்பை குறித்து விசாரித்திருக்கிறார் மாணிக்கம் தாகூர். அப்போது சில விசயங்கள் அவருக்கு சொல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து, உயரமான இடத்தில் அமர்ந்து அரசியல் பண்ண வேண்டும் என்கிற ஆசை துளிர்விட்டதால், தனது அறையை சத்தியமூர்த்தி பவனின் 2வது தளத்துக்கு மாற்றத் திட்டமிட்டுளார்.

இதுகுறித்து கட்சியின் அலுவலக நிர்வாகிகளிடம் விவாதித்தும் இருக்கிறார் மாணிக்கம் தாகூர். விரைவில் இவரது அலுவலகமும் தற்போது இருப்பதை விட உயரமான இடத்துக்கு மாற்றி அமைக்கப்படலாம்'' என்கிறார்கள் கதர்ச்சட்டையினர். இதற்கிடையே, தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை இருந்த போது, அவரது கட்டுப்பாட்டில் அவருக்கென்று தனியாக வார் ரூம் உருவாக்கப்பட்டிருந்தது.

இதற்கான செலவுகளை பாஜக கட்சி கணக்கிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டாலும், அந்த வார் ரூம் ஆக்சன்களை பாஜகவுக்காக பயன்படுத்தாமல் தனது வளர்ச்சிக் காக பயன்படுத்தினார் அண்ணாமலை என்கிற விமர்சனங்கள் உண்டு. அண்ணாமலை பாணியில் தனக்கான ஒரு வார் ரூமை உருவாக்கவும் மாணிக்கம் தாக்கூர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+