துள்ளி துள்ளி வரும் வந்தே பாரத்.. "ஆமா, நம்ம காசு அங்கே ஏன் போகுது?.. ட்விஸ்டு வெச்சது யார்னு பாருங்க
சென்னை: வந்தே பாரத் ரயில் சேவைகள் அடுத்தடுத்து பெருகிவரும் நிலையில், இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி என்ட்ரி தந்துள்ளது. சில கேள்விகளையும் இதுகுறித்து எழுப்பி உள்ளது.
இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. அந்தவகையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.
ரயில் பெட்டிகள்: வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் உள்ளதால், மக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில், என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்..

அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளன... இவைகள் உட்பட வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க, சென்னை பெரம்பூர் லோகோ ஃபேக்ட்ரியில் தயாரிக்கப்படுகிறது.
குளுகுளு ரயில்: முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளாக கண்ணாடியால் மூடப்பட்டு சுழலும் இருக்கைகள், தொடுதிரை வசதிகள், நவீன கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளதால், பெரும் வரவேற்பை மக்களிடம் பெற்று வருகின்றன.
இந்த வந்தே பாரத் திட்டம் பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்கிறார்கள்.. அதனால்தான், ஒவ்வொரு வந்தே பாரத் ரயில் சேவையையும் நேரடியாகவே சென்று பிரதமர் துவக்கி வைத்து வருகிறார். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளது. மாநில தலைவர் அழகிரி இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு, அத்துடன் முக்கிய கேள்வி ஒன்றையும் எழுப்பியிருக்கிறார்.
"மோடி ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாவற்றையும் இந்தியாவில் தயாரிப்பது (மேக் இன் இந்தியா) என்ற கோஷத்தை பரப்பினார். ஆனால், ஜவஹர்லால் நேரு காலத்திலேயே பொதுத்துறை நிறுவனங்கள்தான் மிகுந்த செல்வாக்கோடு இருந்தன.
ஆசிய ஆப்பிரிக்கா: ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் சுதந்திரம் அடைந்த வெகு சீக்கிரத்தில் இந்தியாவில் மட்டும் தான் நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள், இரும்பு தொழிற்சாலைகள், ரயில் என்ஜின், ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள், கப்பல் கட்டும் தளங்கள், ஏராளமான விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்றவற்றை எல்லாம் ஜவஹர்லால் நேரு உருவாக்கினார்.
'இந்தியாவில் அமைக்கப்படுகிற புதிய தொழிற்சாலைகள் தான் நவீன ஆலயங்கள்' என்று நேரு சொன்னார். அவர் காலத்தில் தான் இந்தியாவில் கனரக இயந்திரங்களின் உற்பத்தி அதிகமாயிருந்தது. ஆனால், அவைகளை மறைக்கிற மாதிரி எல்லாவற்றையும் நான் இந்தியாவில் உருவாக்கப் போகிறேன் என்று மோடி சொன்னார். ஆனால், அவருடைய சொல்லுக்கும், செயலுக்கும் சம்மந்தமில்லை.
மேக் இன் இந்தியா: உலகில் இந்திய ரயில்வே இரண்டாவது மிகப்பெரிய ரயில்வே ஆகும். நாமே ரயில்களை உருவாக்கினோம். ரயில் என்ஜின்களை உருவாக்கினோம். அதனால் நம்முடைய அந்நிய செலாவணி மிச்சமாகியது. ஆனால், இன்றைக்கு 'மேக் இன் இந்தியா' என்று சொல்லிவிட்டு, வந்தே பாரத் ரயில்களை ரஷ்யாவில் உற்பத்தி செய்கிறார் மோடி. 120 வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவிற்காக ரஷ்யாவில் தயாரிக்கப்பட இருக்கிறது.
ஒரு ரயிலின் விலை 120 கோடி ரூபாய். இது தேவையா ? ஏன் இந்தியாவிலேயே தயாரிக்கக் கூடாது ? கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிக்கிற அளவுக்கு தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது. ஆனால் அப்படி இருக்கிறபோது நம்முடைய பணத்தை கொண்டு போய் ரஷ்யாவில் முதலீடு செய்கிறார்.
வல்லரசாக முடியும்: உள்நாட்டில் முடிந்த அளவுக்கு உற்பத்தி செய்தால்தான் ஒரு வல்லரசாக முடியும். தேவையான உதிரி பாகங்களை மட்டும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். அல்லது தொழில்நுட்பத்தை பெற்றுக்கொள்ளலாம். அதுதான் நீடித்த வளர்ச்சிக்கு உதவும். மோடி செய்வது அடிமை இந்தியாவைத்தான் உருவாக்கும்.
அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யாவில் இந்தியாவினுடைய ஏராளமான திட்டங்களை கொடுத்து அதன்மூலமாக பொருட்களை வாங்குகிறார். இது வளர்ச்சியடையாத நாடுகள் செய்யக் கூடிய விஷயம். இவர் நிறைய வியாபாரம் கொடுக்கிற காரணத்தினால் அந்த நாடுகள் இவரை அழைத்து பாராட்டுகின்றன. அந்த நாடுகளில் இவருக்கு செல்வாக்கு இருக்கிறது என்று பாஜககாரர்கள் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள்.
சுயவிளம்பரம்: இது சுயவிளம்பரத்திற்கு உதவுமேயொழிய இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவாது. சுயசார்பு என்ற நிலையை நாம் அடைய முடியாது. எனவே, மோடியின் இந்த செயலுக்கு தமிழக காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications