மின்சார வாரியம் திடீர்னு தந்த அடுத்த ஷாக்.. "இது" இனிமேல் திரும்ப கிடைக்காது.. பறந்த "கட்டண" உத்தரவு
சென்னை: புதிய மின் கட்டண உயர்வால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ள நிலையில், அடுத்த அதிர்ச்சியை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் புதிதாக வழங்கப்படும் TNEB மின் இணைப்புகள் அனைத்தும் TANGEDCO என அறியப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

அறிவுறுத்தல்: கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் மின்சார வாரிய இணைதள முகவரியில் மின்சார இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதன் பிறகும், உதவி-செயற்பொறியாளர் அலுவலகங்களில் சென்று மக்கள் எழுத்து பூர்வமாக விண்ணப்பித்து இணைப்புகளை பெற்று வந்தனர்.
எனவேதான், வீடுகளுக்கு மின் இணைப்பு தேவைப்பட்டால் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுவும் மின்சார வாரியத்தின் விதிமுறைகளின்படி தங்களது தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டிருந்தது.
புதிய மின்இணைப்பு: அந்தவகையில், தமிழகத்தில் புதிய மின் இணைப்பு பெற வேண்டுமானால், அல்லது மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால், அல்லது தற்காலிக மின் இணைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு, மின் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.. அதாவது, www.tangedco.gov.in என்ற வெப்சைட்டிற்கு சென்று, "அப்ளை ஆன்லைன்" பகுதிக்குள் நுழைந்து விண்ணப்பிக்க வேண்டும்.
இதன் வாயிலாகவே ஒவ்வொரு சேவைக்கும் உள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும். ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்காக செலுத்திய தொகை விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்பட வேண்டும்.. ஆனால், நுகர்வோர் செலுத்திய தொகை திருப்பி அளிக்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்ததால், மின்வாரியம் மறுபடியும் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது.
விண்ணப்பம்: அதாவது, "மின் இணைப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டால், விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கு விவரம் பெறப்பட்ட 3 நாட்களுக்குள் கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும்" என மின்வாரியம் உத்தரவிட்டது. அதன்படி, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் அவர்களது கட்டணம் திரும்ப தரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் "தாழ்வழுத்த பிரிவில் மின் இணைப்பு, பெயர் மாற்றம், கட்டண விகிதம் மாற்றம், கூடுதல் மின் பளு, சோலார் நெட் மீட்டர் ஆகிய சேவைகளுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்காக செலுத்திய பதிவு கட்டணத்தை திருப்பி வழங்க கூடாது" என மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின் வாரியம் அறிவுறுத்தியிருக்கிறதாம்.. மின் இணைப்பு பெயர் மாற்ற கட்டணம் 615 ரூபாயாகவும்; பதிவு கட்டணம் 205 ரூபாயாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications