அண்ணாமலை தான் தமிழ்நாடு முதல்வர்.. பற்ற வைத்த ஆதரவாளர்கள்.. இது எப்படி சாத்தியம்?
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை இல்லாத ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் அரங்கேறி வருகிறது. இன்று காலை 9:30 மணி நிலவரப்படி வெளியாகியுள்ள முன்னிலை விவரங்கள், 50 ஆண்டுகால திராவிட அரசியலின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்த்துள்ளன. ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில், "அண்ணாமலை தான் அடுத்த முதலமைச்சர்" என அவரது ஆதரவாளர்கள் கிளப்பியுள்ள புதிய விவாதம் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
காலை 9:30 மணி நிலவரப்படி, தமிழக வெற்றி கழகம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 76 தொகுதிகளில் முன்னிலை வகித்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அதிமுக 55 தொகுதிகளிலும், ஆளுங்கட்சியான திமுக 51 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. தற்போதைய நிலவரப்படி எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதோ என்ற சந்தேகம் உள்ளது. அதாவது, தமிழகத்தில் 'தொங்கு சட்டசபை' அமைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

இந்தச் சூழலில் தான் பாஜக-வின் முன்னணி தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஒரு புதிய கணக்கைப் பகிர்ந்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி தவெக (76) மற்றும் அதிமுக (55) ஆகிய இரண்டு கட்சிகளின் முன்னிலையைச் சேர்த்தால் 131 இடங்கள் வருகின்றன. இது ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை விட அதிகமாகும். ஒருவேளை அதிமுக, பாஜக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கினால், அண்ணாமலையை முதலமைச்சராக முன்னிறுத்த வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இங்கு கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அண்ணாமலை இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை. ஆனாலும், ஒரு நபர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத பட்சத்திலும் முதலமைச்சராகப் பதவியேற்க முடியும். ஆனால், பதவியேற்ற 6 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது விதிமுறை. இதனைச் சுட்டிக்காட்டியே அண்ணாமலை ஆதரவாளர்கள் "தமிழகத்தின் அடுத்த முதல்வர் அண்ணாமலை தான்" என கூறி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு












Click it and Unblock the Notifications