கூட்டம் கூட்டமா ஓட்டு போட போறாங்கன்னு கிளப்பி விட்டார்களே! ஜஸ்ட் 11 லட்சம் ஓட்டுதான் அதிகம்
சென்னை: தேர்தலில் வாக்களிக்க, கூட்டம் கூட்டமாக போகிறார்கள்.. அப்படின்னா இந்த முறை மாற்றம்தான்! என சோஷயில் மீடியாக்களில் பேச்சுகள் அடிபட்டது. ஆனால், கடந்த முறையை விட இந்த முறை வெறும் 11 லட்சம் வாக்குகள்தான் கூடுதலாக பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
வழக்கமாக முந்தைய தேர்தல்களை விட அதிக அளவில் வாக்குகள் பதிவாகிறது எனில், அது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி என்று சொல்லப்படும். ஆனால், இந்தமுறை வெறும் 11 லட்சம் வாக்குகள்தான் அதிகரித்திருக்கிறது. இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்று சொல்லப்படுகிறது. ஏன் இப்படி சொல்லப்படுகிறது என்பதை விரிவாக பார்ப்போம்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. மாநிலம் முழுவதும் மாலை 6 மணி நிலவரப்படி 84.73% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சதவீதம் விஷயமே இல்லை
இது 2021-ஆம் ஆண்டு பதிவான 73.63 சதவீதத்தை விட 11% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் பெருமளவு உயர்ந்திருப்பதற்குக் காரணம் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட மாற்றம்தான் (SIR).
2021-இல் 6.37 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, இந்த முறை (2026) 5.67 கோடியாகக் குறைந்துள்ளது. சுமார் 70 லட்சம் (11%) போலி மற்றும் முகவரி மாறிய வாக்காளர்கள் நீக்கப்பட்டதே இந்தச் சரிவுக்குக் காரணம். இப்படி வாக்காளர்கள் குறைந்திருப்பதால்தான் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தெரிகிறது.

உதாரணம்
உதாரணமாக, 100 பேர் கொண்ட பட்டியலில் 60 பேர் ஓட்டுப் போட்டால் பதிவான வாக்கு சதவிகிதம் 60%. அதே பட்டியலில் 10 பெயர்கள் நீக்கப்பட்டு 90 பேர் இருக்கும்போது, அதே 60 பேர் ஓட்டுப் போட்டால் சதவீதம் 66.6% ஆக உயரும். இப்படித்தான் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
11 லட்சம் வாக்குகள்
கடந்த 2021-இல் பதிவான அதே அளவு வாக்குகள் (4.69 கோடி) இப்போதும் பதிவாகியிருந்தாலே, சதவீதம் தானாகவே 82.7% ஆக உயர்ந்திருக்கும். 2021-இல் மொத்தம் 4.69 கோடி வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி சுமார் 4.80 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, கடந்த முறையை விடச் சுமார் 11 லட்சம் வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பதிவாகியுள்ளன.
சதவீத அடிப்படையில் இது 11% உயர்வு போலத் தெரிந்தாலும், உண்மையான மக்கள் பங்களிப்பு கடந்த முறையை விடச் சுமார் 2% முதல் 3% மட்டுமே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications