சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு.. ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு செக்!

Google Oneindia Tamil News

சென்னை: தற்போது ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் உரியவாறு பதவியில் இருந்து விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் போட்டியிட்டால் அவர்கள் ஏற்கனவே வகிக்கும் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த அக். மாதம் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், அப்போதே விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் சற்றே காலதாமதம் ஏற்பட்டது.

முல்லை பெரியாறு அணை பிரச்சினை நிரந்த தீர்வுக்கு முதலில் இதை செய்யுங்க.. தமிழக அரசுக்கு ராமதாஸ் யோசனைமுல்லை பெரியாறு அணை பிரச்சினை நிரந்த தீர்வுக்கு முதலில் இதை செய்யுங்க.. தமிழக அரசுக்கு ராமதாஸ் யோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

இந்நிலையில், கடந்த கடந்த புதன்கிழமை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தேர்தல் அட்டவணையினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 26,01.2022 அன்று வெளியிட்டது. அதன்படி தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 28.01.2022 முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

தகுதி நீக்கம்

தகுதி நீக்கம்

மேற்படி பதவியிடத்திற்கு தற்போது மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் அல்லது கிராம ஊராட்சித் தலைவராகப் பதவி வகிப்பவர்கள் தங்கள் பதவியினை உரியவாறு ராஜினாமா செய்யாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் நேர்வில், அவர் போட்டியிடும் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அல்லது வெற்றி வாய்ப்பினை இழந்தாலும், அவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்கின்ற உறுதிமொழி ஆவணத்தில் அவரது இருப்பிடம் குறித்து அளித்திருக்கும் உறுதிமொழியினை ஆவணமாகக் கொண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி அவர் தற்போது தொடர்புடைய ஊராட்சிப் பகுதியில் வசிக்கவில்லை என உறுதி செய்யப்பட்டு, மேற்படி சட்டம், பிரிவு 41(1)-ன்படி, அவரை தற்போது அவர் வகிக்கும் பதவியில் தகுதிநீக்கம் செய்ய ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Recommended Video

    அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி.. பாஜக அறிவிப்பு
    பல முனை போட்டி

    பல முனை போட்டி

    இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 7 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அதே கூட்டணியுடன் திமுக களமிறங்குகிறது. அதிமுக உடன் கைகோர்த்து பாஜக இந்த முறை களமிறங்குகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாமக தனித்துப் போட்டியிடுகிறது. இவை தவிர அமமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் தனித்தே களமிறங்குகின்றன.

    English summary
    TN election commission says rural local body representatives will be disqualified if they contest in urban local body elections: Tamilnadu urban local body elections latest updates in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X