கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு மொத்தமாகவே 5 தொகுதிகள் மட்டுமே அதிமுக தரப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் அதிகமுள்ள தொகுதிகளை பாஜக பக்கம் அதிமுக தள்ளிவிட்டுள்ளது. மறுபக்கம் திமுக வலிமையாக இருக்கும் தொகுதிகளையும் பாஜக பக்கம் எடப்பாடி பழனிசாமி தள்ளிவிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் குறித்த விவரங்களை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதன்படி மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகை, அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TN Election Exclusive

தொடர்ந்து, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, ராசிபுரம், ராமநாதபுரம், பத்மநாபபுரம், மானாமதுரை, குளச்சல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக வலிமையாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் மொத்தமாக 5 தொகுதிகள் மட்டுமே அதிமுக ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதேபோல் திமுக வலிமையாக இருக்கும் தொகுதிகளையும் பாஜக பக்கம் தள்ளிவிட்டுள்ளது.

திருவாரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, ஆவடி, திருப்பத்தூர், திருச்செந்தூர் உள்ளிட்ட தொகுதிகள் திமுகவின் கோட்டை மட்டுமல்லாமல், அமைச்சர்களின் தொகுதியாகும். அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் சிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளை பாஜகவுக்கு அதிமுக தள்ளிவிட்டுள்ளது.

சென்னை 1, கோவை 1, மதுரை 1, சேலம் 0 என்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அண்ணாமலையின் சொந்த ஊரான கரூரில் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. வடமாவட்டங்களிலும் பெரியளவில் பாஜகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இதனால் பாஜகவின் முக்கிய முகங்கள் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவார்களா என்பதே கேள்விக்குறி தான் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். மதுரை தெற்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் அங்கு பாஜக வெல்வதில் சிக்கல் உருவாகும் என்று தெரிகிறது. இதனால் பாஜகவின் ஒட்டுமொத்த கன்ட்ரோலையும் எடப்பாடி பழனிசாமி எடுத்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+