39 தொகுதிகள் அல்ல.. 27 போதும்.. இறங்கி வந்த காங்கிரஸ் தலைமை.. ஸ்டாலின் முடிவு என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் 27 தொகுதிகளை கேட்டு காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளை கோரி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் திமுக தலைமை 25 தொகுதிகளுக்கு மேல் இறங்கி வர மறுத்த சூழலில், அடுத்தக் கட்டமாக 27 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டிருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2 மாதங்களாகவே திமுக - காங்கிரஸ் இடையில் சுமூகமான உறவு இல்லாத சூழல் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் ஆட்சியில் பங்கு என்று பேசி வந்தனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே ஆட்சியில் பங்கு என்ற பேச்சிற்கே இடமில்லை என்று அறிவித்தார்.

TN Election Exclusive

ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றும் முடிவையே திமுக எடுத்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே அவசர அவசரமாக டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சென்னை வந்து முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையின் மூலமாக திமுக - காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியானது.

இதனிடையே சோனியா காந்தியின் கருத்துக்கள் அடங்கிய கடிதம் ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் சீனியர்களிடமும், நம்பகமான கூட்டணியாக இருக்கும் திமுகவுடன் எந்தவித பிரச்சனையும் வேண்டாம்.. சுமூகமாக தொகுதிப் பங்கீட்டை முடியுங்காள் என்று சோனியா காந்தியும் வலியுறுத்தியதாக தெரிய வந்தது.

இதன்பின் கிரிஷ் சோடங்கர் - கனிமொழி இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இதன் காரணமாக ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சி கைவிட்டது. இருந்தாலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளை கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் திமுக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு 25 தொகுதிகளை மட்டுமே மீண்டும் கொடுக்கப்படும் என்று கூறி இருக்கிறது.

ஒரு தொகுதி கூட கூடுதலாக கொடுக்கப்பட வாய்ப்பில்லை என்று திமுக கூறியதாகவும் தெரிகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி தரப்பில் 27 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ராஜ்ய சபா சீட் கொடுக்க திமுக ஒப்புக் கொண்டதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்தபடி 27 தொகுதிகள் அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+