ஸ்ரீகாந்தி, ஜிகே மணி, அருள்.. பாஜகவிடம் 5 சீட் கேட்கும் ராமதாஸ்.. மாம்பழம் சின்னத்திற்கும் செக்!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் என்டிஏ கூட்டணியில் இணைவதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். என்டிஏ கூட்டணியில் இணைந்தால் மாம்பழம் சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று ராமதாஸ் கூறியதாகவும், தன்னுடன் இருக்கும் 5 பேருக்கு கட்டாயம் சீட் கொடுக்க வேண்டும் என்றும் டிமாண்ட் வைத்திருக்கிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. இதனால் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒரு பிரிவும், அன்புமணி தலைமையில் ஒரு பிரிவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். தற்போது தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அன்புமணி தரப்பு பாமக, என்டிஏ கூட்டணியில் இணைந்துவிட்டது.

இதனால் ராமதாஸ் தரப்பு திமுகவுடன் இணைய ஆர்வம் காட்டி வந்தது. ஆனால் திருமாவளவன் எதிர்ப்பு காரணமாக, ராமதாஸை கூட்டணிக்குள் சேர்க்க திமுக தயங்கியது. இதனால் தவெக உடன் இணையலாமா என்று ராமதாஸ் தரப்பு ஆலோசித்து வருகிறது. இருந்தாலும் ஜூனியரான விஜய்யுடன் கைகோர்க்க ராமதாஸ் தயங்கி வருகிறார்.
இதனிடையே தங்கள் பக்கம் வரும் என்று காத்திருந்த தேமுதிக திடீரென திமுக பக்கம் சென்றது. இதனால் டெல்லி பாஜக தலைமையும் கொஞ்சம் அதிர்ச்சியில் இருக்கிறது. அதேபோல் வடமாவட்டங்களில் தேமுதிக மற்றும் விஜய் ஏற்படுத்தப் போகும் பாதிப்பை அன்புமணியும் உணர்ந்தே இருக்கிறார். இதனால் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்புடன் பேசி வருவது தெரிய வந்துள்ளது.
ராமதாஸ் தரப்பில் ஸ்ரீகாந்தி பேசி வருகிறார். அப்போது ராமதாஸ் - அன்புமணி இடையில் சமாதானத்திற்கான பேச்சுவார்த்தையை பாஜக தொடங்கி இருக்கிறது. அதேபோல் கூட்டணிக்குள் வந்தால், உங்களுக்கு தேவையானதை செய்வதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ராமதாஸ் தரப்பில், நாங்கள் கூட்டணிக்கு வர வேண்டுமென்றால் மாம்பழம் சின்னத்தை எங்கள் வேட்பாளர்கள் போட்டியிட சம்மதிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் ஸ்ரீகாந்தி, ஜிகே மணி மற்றும் அருள் உள்ளிட்ட 5 பேருக்கு சீட் கொடுக்க வேண்டும். இதனை ஏற்றால், தொகுதி எண்ணிக்கை தொடர்பாக மேலும் பேசலாம் என்று ராமதாஸ் தரப்பு கூறிவிட்டதாக தெரிகிறது. அதேபோல் ராமதாஸ் நிபந்தனைகளை அன்புமணியும் ஏற்க சம்மதித்துவிட்டதாகவே தெரிகிறது. இதனால் கூடிய விரைவில் இணைப்பு நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications