35 தொகுதிகள் நிச்சயம் தேவை.. 72 தொகுதிகளுக்கான பட்டியலை கொடுத்த பாஜக.. உற்று பார்க்கும் எடப்பாடி!
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் 35 தொகுதிகளை பாஜக எதிர்பார்ப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமி வசம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக தரப்பில் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் தமிழக பாஜக நிர்வாகிகள் பலரும் நம்பிக்கையுடன் தேர்தல் பணிகளை தொடங்கி இருக்கின்றனர்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தங்களின் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. மார்ச் 1ஆம் தேதிக்குள் இந்த பேச்சுவார்த்தையை முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு முடித்து திமுக கூட்டணி கட்சி தலைவர்களுடன் திருச்சியில் நடக்கும் பிரம்மாண்ட மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டிருக்கின்றனர்.

இன்னொரு பக்கம் அதிமுக தலைமையும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. முதற்கட்டமாக அத்தனை கட்சிகளுடனும் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் வைத்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்ட பின், அதிமுக பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவுடன் எந்தெந்த தொகுதிகள் என்பதை பேச்சுவார்த்தை மூலமாக முடிவு செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் இருவரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது பாஜக தரப்பில் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை கொடுத்திருக்கின்றனர்.
அதேபோல் பாஜக குறைந்தபட்சமாக 30 முதல் 35 தொகுதிகளை எதிர்பார்க்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 4ல் வென்றது. இம்முறை 30 தொகுதிகள் ஒதுக்கப்படும் பட்சத்தில், அது அதிமுகவுக்கு பின்னடைவாக அமையும் என்று கருதப்படுகிறது. ஆனால் பாஜகவின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலில் சென்னையில் மட்டும் 3 தொகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆயிரம் விளக்கு, தி நகர் மற்றும் வேளச்சேரி ஆகிய 3 தொகுதிகளையும் பாஜக எதிர்பார்க்கிறது. அதேபோல் கோவையில் தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, சிங்காநல்லூர், திருத்தணி, காஞ்சிபுரம், ஆலங்குளம், தென்காசி, அரவக்குறிச்சி, திருவண்ணாமலை, பழநி, விளவங்கோடு உள்ளிட்ட தொகுதிகள் உள்ளன.
பாஜகவுக்கு சாதகமான தொகுதிகள் மற்றும் அதிமுக வலுவாக இருக்கும் தொகுதிகள் இந்தப் பட்டியலில் இருக்கிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னும் சில நாட்களில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வரவுள்ள சூழலில், தொகுதி பங்கீடு முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே











Click it and Unblock the Notifications