சசிகலா, ஓபிஎஸ், கருணாஸ்.. முக்குலத்தோர் வாக்குகளை அறுவடை செய்ய ஸ்டாலினின் மைக்ரோ பிளான்!
சென்னை: தென் மாவட்டங்களில் கணிசமாக இருக்கும் முக்கலத்தோர் மற்றும் நாடார் சமூக மக்களின் ஆதரவை பெற திமுக தலைமை மைக்ரோ லெவல் பிளாவில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக 2016ல் ஜெயலலிதா பின்பற்றிய அதே பாணியை முதல்வர் ஸ்டாலின் பின்பற்ற தொடங்கி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் மட்டும் 58 சட்டசபைத் தொகுதிகள் இருக்கின்றன. இதில் கணிசமாக வெல்லும் கட்சியே பெரும்பாலும் ஆட்சியை அமைக்க முடியும். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கு கொடுத்த 11.5 சதவிகித இடஒதுக்கீடு அதிமுகவுக்கு பின்னடைவாக மாறியது. அதேபோல் அதிமுக மீது கவுண்டர் சாயம் பூசப்பட்டது.

அதற்கேற்ப கொங்கு மண்டல நிர்வாகிகளே இப்போதும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கடந்த முறை எஸ்டிபிஐ மற்றும் தேமுதிக ஆகியோருடன் டிடிவி தினகரனின் அமமுக, 23 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை தடுத்தது. இதனால் இம்முறை பாஜக மூலமாக டிடிவி தினகரனை தங்களின் கூட்டணிக்குள் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்துவிட்டார்.
ஆனால் அவரே எதிர்பார்க்காத ஒரு சம்பவமாக ஓபிஎஸ் திடீரென திமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார். முக்குலத்தோர் மக்களின் அடையாளமாக ஓபிஎஸ் இருந்தாலும், அவருக்கு இருந்த செல்வாக்கு தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. இருந்தாலும் திமுகவுக்குள் ஓபிஎஸ் கொண்டு வரப்பட வேறு சில காரணங்கள் இருக்கின்றன.
அதாவது முக்குலத்தோர் சமூகத்திற்கு எதிரானவர் எடப்பாடி பழனிசாமி என்ற பிம்பத்தை திமுக கட்டமைக்க உள்ளது. 2026 சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் களமாட போவது உறுதியாகி இருக்கிறது. அதேபோல் 2016ஆம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பாக கருணாஸ் திருவாடனை தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.
கருணாஸ் அதிமுக கூட்டணிக்கு கொண்டு வரப்பட்டதற்கு, முக்குலத்தோர் சமூக பின்னணியும் காரணம். அதே பாணியை முதல்வர் ஸ்டாலின் இம்முறை பின்பற்றி இருக்கிறார். இந்த தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் கருணாஸ் போட்டியிட இருக்கிறார். அவரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முக்குலத்தோர் சமூக பிரதிநிதியாக களமாடுவார் என்று தெரிகிறது.
இன்னொரு பக்கம் சசிகலாவும் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்த தயாராகிவிட்டார். அதற்கேற்ப முக்குலத்தோர் சமூக சங்கங்கள், அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைந் நடத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ டிடிவி தினகரன் மற்றும் பாஜகவை மட்டுமே நம்பி இருக்கிறார். இதனால் திமுகவின் மைக்ரோ லெவன் பிளான் பலன் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications