மீண்டும் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட திமுகவில் காய் நகர்த்தும் பத்ம பிரியா.. ரசிக்காத சீனியர்கள்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் திமுக மாநில ஐடி விங் நிர்வாகி பத்ம பிரியா போட்டியிட விரும்புவதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த முறை மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்ம பிரியா சுமார் 33 ஆயிரத்திற்கும் அதிக வாக்குகளை பெற்றார். இதனால் திமுகவிலும் அவர் சீட் எதிர்பார்ப்பதாக தெரிய வந்துள்ளது.
2021 சட்டசபைத் தேர்தலில் தலைநகர் சென்னையில் போட்டியிட திமுகவின் ஜுனியர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். திமுக ஆட்சி அமைக்கப்பட்ட நாள் முதலே இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அண்மையில் கூட 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1,000 அளிக்கப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டம், தொழில் முதலீடுகள் மூலமாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் இளைஞர்களை கவரும் வகையில் சில புதுமுகங்களையும் தேர்தல் களத்தில் இறக்க திமுக தலைமை ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில் மேயர் பிரியா ராஜன் தொடங்கி கனிமொழியின் டீமில் உள்ள யாழினி, உதயநிதியுடன் நெருக்கம் காட்டி வரும் தமிழன் பிரசன்னா, கேகே நகர் தனசேகரன், திமுக ஐடி விங் மாநில துணைச் செயலாளர் பத்ம பிரியா உள்ளிட்டோர் சீட் எதிர்பார்த்துள்ளனர். மேயர் பிரியா வடசென்னையில் ஒரு தொகுதியை எதிர்பார்த்து அமைச்சர் சேகர்பாபுவிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக கடந்த சட்டசபைத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டார். இதில் திமுக வேட்பாளர் கணபதி 1,21,298 வாக்குகள் பெற்று வென்றார். அதிமுக வேட்பாளர் பென்ஜமின் 89,577 வாக்குகளை பெற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட்ட பத்ம பிரியா 33,401 வாக்குகளை பெற்றார். திமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக மக்கள் நீதி மய்யம் உதவியாக இருந்தது.
இந்த முறை பத்ம பிரியா மீண்டும் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். இதனை திமுக சீனியர்கள் பெரியளவில் ரசிக்கவில்லை. கடந்த முறை மக்கள் நீதி மய்யம் சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த 2 மாதங்களில் பத்ம பிரியா கட்சியில் இருந்து, திமுகவில் ஐக்கியமானார். அதன்பின் திமுகவுக்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications