புதிய தமிழகம் கட்சிக்கு 2 சீட்.. அப்செட்டில் இருந்த நயினார் நாகேந்திரன்! நம்பிக்கையாக சொன்ன எடப்பாடி
சென்னை: அதிமுக உடனான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. புதிய தமிழகம் கட்சி தரப்பில் 4 தொகுதிகள் வரை எதிர்பார்க்கப்படும் சூழலில், எடப்பாடி பழனிசாமி 2 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாது என்ற கறாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், இன்னும் ராமதாஸ் மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் தான் கூட்டணியை அறிவிக்காமல் இருக்கின்றனர். இதில் புதிய தமிழகம் கட்சியுடன் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. புதிய தமிழகம் கட்சி கூட்டணிக்கு வராததால், அதிக பிரஷரில் இருப்பது நயினார் நாகேந்திரன் தான்.

ஏனென்றால் தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் அதிகளவில் இருக்கின்றன. இதனால் புதிய தமிழகம் கட்சி கூட்டணியில் இருந்தால், என்டிஏ வேட்பாளர்களின் வெற்றி இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அதேபோல் இம்முறை நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார்.
இதனால் புதிய தமிழகம் கட்சி உடனான கூட்டணியை நயினார் நாகேந்திரன் அதிகம் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் கிருஷ்ணசாமியின் டிமாண்ட் எக்குத்தப்பாக இருப்பதால், கூட்டணி அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கிருஷ்ணசாமி தரப்பில் 5 தொகுதிகள் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தொகுதிகளை குறைத்து கொள்ள வேண்டுமென்றால், 2028ல் ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறார்.
இதனை கேட்ட எடப்பாடி பழனிசாமி, 2 தொகுதிகள் மட்டும்தான்.. ராஜ்ய சபா சீட்டுக்கு வாய்ப்பே இல்லை என்று கறார் காட்டி இருக்கிறார். மறுபக்கம் திமுக கூட்டணியில் இருந்து பேச்சுவார்த்தை நடத்துவோர் சத்தமின்றி அமைதியாகிவிட்டனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நயினார் நாகேந்திரனுக்கு நம்பிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் புதிய தமிழகம் கூட்டணிக்கு வந்துவிடும் என்று எடப்பாடி கூறியுள்ளார். இதனால் புதிய தமிழகம் கட்சிக்கு 2 முதல் 3 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த 2 நாட்களில் வெளியாகி, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றும் பார்க்கப்படுகிறது.
-
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி!












Click it and Unblock the Notifications