சொத்து வரி ரசீது இருக்கா? 726 ரூபாயுடன் ரெடியா இருங்க.. மின்துறை அமைச்சரின் "தங்கமான" அறிவிப்பு வருது
சென்னை: வீட்டு பிரிவு நுகர்வோர் ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றம் செய்வதற்கான ஒரு மாத சிறப்பு முகாம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கிட, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்கிட வேண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு, சட்டசபையில் உத்தரவிட்டிருந்தார்.

தங்கம் தென்னரசு: இதற்கு பிறகு, மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தியாளர்களிடம் பேசும்போது, ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.. அதன்படி, மாநிலம் முழுதும், 43,244 கம்பங்களை மாற்றுவது, 20,570 இடங்களில் மின் மின் கம்பியை சரிசெய்வது என்று மொத்தம், 3.89 லட்சம் பணிகள் நடக்க வேண்டும்.
அவற்றை முறையான திட்டமிடலுடன் மக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்து, அதிக நேரம் மின் தடை ஏற்படாமல் செய்ய வேண்டும். மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது, பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்க, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்க, சிறப்பு பெயர் மாற்றம் முகாம், அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும், வரும் 24ம் தேதி முதல் நடத்த வேண்டும்.. கட்டணம் செலுத்திய அன்றே உடனடியாக பெயர் மாற்றமும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்" என்று அறிவித்திருந்தார்.
மின்வாரியம் தயார்: அமைச்சர் இவ்வாறு அறிவித்திருந்த நிலையில், மின்வாரியமும் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டது.. அதன்படி, கடந்த 24ம் தேதி முதல், சிறப்பு முகாம்களையும் நடத்த தயாராகிவிட்டது.
வீட்டு மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் பெறுவதற்கு, ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து, நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை செலுத்தி பெயர்மாற்றம் செய்துகொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது என்றாலும், மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கி, கட்டணம் செலுத்திய அன்றே உடனடியாக பெயர் மாற்றம் வழங்க வேண்டும் என்பதற்காகவே, இந்த "சிறப்பு பெயர் மாற்றம் முகாம்" நடத்தப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும், இந்த சிறப்பு பெயர் மாற்றம் முகாம்கள், ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை தினங்கள் தவிர்த்து, அனைத்து அலுவலுக வேலை நாட்களிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை செயல்பட்டு வருகிறது. இந்த மாதம் 11ம் தேதி வரை, 1.08 லட்சம் பேருக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நேற்றுடன் இந்த முகாம் முடிவடைந்த நிலையில், இதுவரை, 2.10 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
மின் வாரியத்திடம் உள்ள மின் நுகர்வோர்களின், ஆதார் எண் அடிப்படையில் சொத்து விற்பனை, உரிமையாளர் உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால், மொத்தம் 4.50 லட்சம் பேர் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால், இதுவரை, 2.10 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
கால அவகாசம் நீட்டிப்பு: இதையடுத்து, மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாமை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.. இதுதொடர்பாக, மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் அனுமதி பெற்று சில தினங்களில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டால், பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்களில் தங்களது வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து, நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமான ரூ. 726/- (ரூ 615+GST ரூ 111) செலுத்தி இந்த "சிறப்பு பெயர் மாற்றம் முகாம்" மூலம் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
ஆவணங்கள்: அத்துடன், விண்ணப்பதாரர் கீழே குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் கீழே குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அ) வளாகத்தின் விற்பனையின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
ஆதார் அட்டை.
(அ) நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் (அல்லது) விற்பனைப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் (அல்லது) ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் (பரிசு பத்திரம் / செட்டில்மென்ட் பத்திரம் போன்றவை) (அல்லது) நீதிமன்ற உத்தரவு.
(ஆ) நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு விற்பனைப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் (அல்லது) ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் (பரிசு பத்திரம் / செட்டில்மென்ட் பத்திரம் போன்றவை) (அல்லது) நீதிமன்ற உத்தரவு.
ஆ) இறப்பின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
செட்டில்மென்ட் பத்திரம் (அல்லது) பகிர்வு பத்திரம் சமர்ப்பிக்கப்படாவிட்டால், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின்படி அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும்.
ஆதார் அட்டை.
(அ) நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் (அல்லது) உரிமை ஆவணத்தின் ஜெராக்ஸ் நகல்.
(ஆ) நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு உரிமை ஆவணத்தின் ஜெராக்ஸ் நகல்.
இ) குழு வீடுகளில் பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளில் (வீதப்பட்டி ID) பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
பில்டர்கள்/டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள்/ குடியிருப்பு வளாகங்கள்/ குரூப் ஹவுஸிங்கில் உள்ள பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய பின் வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நலவாழ்வு சங்கத்தின் பெயரில் பதிவு சான்றிதழ் (அல்லது) வளாகம்/அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற, விண்ணப்பத்தில் கையொப்பமிட குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம் போன்ற ஆவணங்கள் அவசியம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications