பொறியியல் தர வரிசை பட்டியல்..டாப் 1 நேத்ரா..3 இடமே மாணவிகள்தான்.. பொன்முடி முகத்தில் புன்னகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொறியியல் தரவரிசை பட்டியலில் 102 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். பொறியியல் தரவரிசை பட்டியலில் திருச்செந்தூர் நேத்ரா முதலிடம், தருமபுரி ஹரிணிகா 2-ஆம் இடம், திருச்சி ரோஹிணி 3ம் இடம் பிடித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட மாணவி நேத்ரா பொறியியல் தர வரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,847 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

TN Engineering Counselling rank list 2023 Top 3 students says Minister Ponmudi

பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பதிவு கடந்த மே 15 முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் 6ம் தேதி வெளியான நிலையில், தற்போது பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியானது. கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியலை http://tneaonline.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி முதல் ஆக.28 வரை நடைபெற உள்ளது. நீட் தேர்வு முடிவு காரணமாக பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை 2-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தோம். மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்காத காரணத்தால், பொறியியல் கலந்தாய்வு நடத்த தாமதமாகும் எனவும் கூறினார். பொறியியல் தரவரிசை பட்டியலில் திருச்செந்தூர் நேத்ரா முதலிடம், தருமபுரி ஹரிணிகா 2-ஆம் இடம், திருச்சி ரோஹிணி 3ம் இடம் பிடித்துள்ளார்.

தரவரிசை பட்டியலில் 102 பேர் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்ற 102 பேரில் 100 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் ஆவர். 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 28, 425 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியலில் வழங்கப்பட்டுள்ளது. இதில், சைதாப்பேட்டையை சேர்ந்த மகாலட்சுமி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் அமைச்சர் கூறுகையில், 7.5% இட ஒதுக்கீட்டில் கடந்தாண்டை விட கூடுதலாக 5,842 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அரசு பள்ளியில் படித்து பொறியியலில் சேர்ந்த 13,284 பேர் புதுமை பெண் திட்டத்தில் பயனடைகின்றனர். அரசு பள்ளியில் படித்த 15,136 ஆண்கள், 13,284 பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பொறியியல் படிப்பு படிக்கவுள்ளனர் எனவும் தெரிவித்தார். மாநில கல்வி கொள்கை வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுத்தொண்ட நல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த நேத்ரா என்ற மாணவி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்று பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+