'ரூட்' க்ளீயர்.. நேஷ்னல் முதல் லோக்கல் வரை.. 'ஒரே' ரிப்போர்ட் - மகிழ்ச்சிக் கோட்டையில் திமுக!
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், திமுக தலைவரை உற்சாகம் கொள்ளச் செய்யும் ரிப்போர்ட் சென்றிருக்கிறதாம்.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 களத்தின் 'கிளைமேக்ஸ்' நேரமிது. இன்னும் 72 மணி நேரத்திற்குள்ளாகவே, தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கான விடை தெரிந்துவிடும்.
ஆளும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியா? அல்லது திமுகவின் மு.க.ஸ்டாலினா? என்பதற்கான பதில் அல்மோஸ்ட் தயாராகிவிட்டது.

அடுத்த முதல்வர்
ஆம்! இன்று இரவு 7:30 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகவுள்ளது. இதில், திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆட்சியை முதல்வர் பழனிசாமி தக்க வைப்பாரா? அல்லது மு.க.ஸ்டாலின் தட்டிப் பறிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதிமுக மட்டுமின்றி, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி என்று ஐந்து முனை போட்டி நிலவுவதால், எதிர்பார்த்த அளவுக்கு சீட் மற்றும் வாக்கு சதவிகிதம் கிடைக்குமா? என்ற ஐயம் இரு திராவிட கட்சிகள் மத்தியில் இல்லாமல் இல்லை.

முழு அறிக்கை ரெடி
தமிழக ஊடகங்களும் றெக்கை கட்டி கருத்துக்கணிப்புகளை வெளியிட தயாராக உள்ளன. இதுகுறித்த 'ஓவர் ஆல்' ரிப்போர்ட் திமுக தலைவர் தரப்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். இந்த முடிவுகள் ஏற்கனவே எதிர்பார்த்தது தான் என்றாலும், கடைசி நேர டானிக் ஸ்டாலினுக்கு ஏக உற்சாகத்தை அளித்துள்ளது என்கின்றனர் சில உடன்பிறப்புகள்.

மனம் குளிர்ந்த ஸ்டாலின்
இதுதவிர, பிரசாந்த் கிஷோரின் 'ஐபேக்' தனியாக எடுத்துள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ரிப்போர்ட்டும், ஸ்டாலின் மனம் குளிரவைத்துவிட்டதாம். குறிப்பாக, தென் மாவட்டங்களிலும், கொங்கு மண்டலங்களிலும் ஸ்டாலினே எதிர்பாராத ரிசல்ட் கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாம். கலைஞர் இல்லாத திமுகவில், ஸ்டாலினுக்கு இப்படியொரு வெற்றியா என்று அதிமுக சைடில் புகையாமல் இல்லை.

திசைமாறிய சான்றுகள்
அதேசமயம், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்பது உறுதியான ரிசல்ட் கிடையாது. 2016 சட்டமன்ற தேர்தலில் கூட, இதற்கான சான்றை நாம் காண முடியும். கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில், இந்தியா டுடே- ஆக்ஸிஸ்' நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு 89 - 101 இடங்களும், திமுக கூட்டணிக்கு 124 - 140 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 4-8 இடங்களும் கிடைக்கும் என்று கணித்திருந்தது. அதேபோல், டைம்ஸ் நவ் - சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு 139 இடங்களும், திமுக கூட்டணிக்கு 78 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 17 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகளில் அதிமுகவுக்கு 134 இடங்களும், திமுக கூட்டணிக்கு 98 இடங்களும் கிடைத்தன. இப்படி கடைசி நேரத்தில் காற்று திசைமாறிய பல சான்றுகள் உள்ளன.
எது எப்படியோ.. தேசிய ஊடகங்கள் முதல் உள்ளூர் ஊடகங்கள் வரையிலான கருத்துக்கணிப்பில் திமுக டாப் இடத்தில் இருப்பதால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோட்டைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார் என்று சிலாகிக்கின்றனர் உடன்பிறப்புகள்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications