TN EXIT POLLS..2 பேருக்கு நடுவுல தான் போட்டியே! ஒன்னு TVK..இன்னொன்னு NTK! விஜய்க்கு டோட்டல் டேமேஜ்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அவற்றை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தமிழகத்தில் மீண்டும் திமுக மற்றும் அதிமுக இடையில்தான் நேரடி போட்டி நிலவி வருவதாக பெரும்பாலான கணிப்புகள் திட்டவட்டமாகக் கூறுகின்றன. இதே நேரத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே மூன்றாவது இடத்திற்கான போட்டி தான் நிலவி வருவதாகவும் கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.
தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புடன் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நீடித்த இந்த ஜனநாயகத் திருவிழா, West Bengal மாநிலத்தின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுடன் நிறைவடைந்தது.

இந்த முறை நடைபெற்ற தேர்தலில் பல மாநிலங்களில் அதிக அளவிலான வாக்குப்பதிவு பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த 23ஆம் தேதி 234 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது.
இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களம் கண்டனர். தமிழக தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்த முறை 85.10 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் மாலை 6.30 மணி முதல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. பொதுவாக வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு வெளியே வரும் நேரத்தில், அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் ஆய்வே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என அழைக்கப்படுகிறது.
தேர்தலுக்கு முன் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை விட, இவ்வகை கணிப்புகள் வாக்காளர்களின் உண்மையான மனநிலையை பிரதிபலிக்கும் என்பதால், அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். தற்போது வெளியாகியுள்ள பல்வேறு நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளை ஒப்பிட்டு பார்க்கும்போது, திமுக கூட்டணி சுமார் 103 முதல் 145 தொகுதிகள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் அதிமுக கூட்டணி 65 முதல் 124 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என மாறுபட்ட கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இரண்டு பெரிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
முக்கியமாக, தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்த தேர்தலில் முக்கியமான போட்டி திமுக மற்றும் தனது கட்சிக்கிடையே இருக்கும் என தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் தற்போது வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகள், தமிழக வெற்றிக் கழகம் 10 முதல் 30 தொகுதிகள் வரையிலான இடங்களை மட்டுமே பெற வாய்ப்பு இருப்பதாகக் காட்டுகின்றன. அதே நேரத்தில் Naam Tamilar Katchi கட்சியும் சில தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெறக்கூடும் என்பதால், மூன்றாவது இடத்திற்கான போட்டி இந்த இரண்டு கட்சிகளுக்கிடையே தான் நடைபெறும் என பல அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தற்போதைய சூழலில் பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனங்களான Poll of Polls நிறுவனம் தமிழக வெற்றி கழகத்திற்கு 15 முதல் 23 இடங்களும், VoteVibe 4 முதல் 10 இடங்களும், Matrize 10 முதல் 12 இடங்களும், PMARQ 16 முதல் 26 இடங்களும், Peoples Pulse 18 முதல் 24 இடங்களும், People's Insight 30 முதல் 40 இடங்களும் கிடைக்கும் என கணித்துள்ளன. இது தவிர அக்னி, சாணக்யா, சிஎன்என், டைம்ஸ் நவ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் தவெவுக்கு 5 முதல் 20 இடங்கள் வரை தான் கிடைக்கும் எனக் கூறியுள்ளது.
அதே நேரத்தில் பெரும்பாலான கணிப்புகள் நாம் தமிழர் கட்சி 1 முதல் 8 இடங்கள் வரை கூட பெறலாம் என கனித்துள்ளன. அந்த வகையில் மூன்றாவது இடத்தை பெறுவதற்கு தான் தவெக போட்டி போட்டு வருவதாக தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன.












Click it and Unblock the Notifications