தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை.. சென்னை வானிலை மையம்
சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடந்த 3 தினங்களாக மழை கொட்டி வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் நேற்றைய தினம் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

நாளை அதிகாலை
பின்னர் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வடதமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக இன்றும் நாளையும் வடதமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை
மேலும் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நீர் நிலைகள்
அடுத்த 12 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோரத்தில் கனமழை பெய்யும். மாநிலத்தில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் 37 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழகத்தில் உள்ள பாசன கால்வாய்களில் 26 சதவீதம் நிரம்பிவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அதாவது 75 சதவீதம் அளவுக்கு கால்வாய்கள் நிரம்பிவிட்டன. 11 கால்வாய்கள் நீரை தேக்க வழியின்றி கிடக்கின்றன.
Recommended Video

வெள்ள அபாய எச்சரிக்கை
சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆங்காங்கே இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது. ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வருமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. நாளை வரை தமிழகத்தில் கனமழை தொடரும் நிலை உள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications