விட்றாதீங்க 1000 ரூபாயை.. முதலமைச்சர் திறனாய்வு தேர்வு.. பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி.. இன்று முதல்
சென்னை: முதலமைச்சர் திறனாய்வு தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், நடப்பாண்டு முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உயர்கல்வி மாணவர்கள்: மாணவர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் நோக்கில், பள்ளி கல்வித்துறை இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.. இந்த தேர்வு வருடந்தோறும் நடத்தப்படும்.. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகளுக்கு என மொத்தம் 1000 பேருக்கு இளங்கலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
நடப்பாண்டு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு அக்டோபர் 7ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
தமிழக அரசு அறிவிப்பு: அதில், "அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், 2023-24ஆம் கல்வியாண்டு முதல் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெறும் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகளுக்கு என மொத்தம் 1000 பேருக்கு இளங்கலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
நடப்பாண்டு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு அக்டோபர் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களது ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மகிழ்ச்சி: பயனர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றை டைப் செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஹால் டிக்கெட்டில் பெயர், தேதி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பானது, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications