50,000 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள்: எப்படி விண்ணப்பிப்பது? தேவையான ஆவணங்கள் என்னென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயத்திற்கு 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பிப்பது எப்படி? அதற்குத் தேவையான ஆவணங்கள் என்னென்ன?

தமிழகத்தின் மொத்த பாசனப் பரப்பில் 55 சதவீத நிலங்களுக்கு எவ்விதக் கட்டணமும் இல்லாமல் பாசன நீரானது ஆறுகள் வழியே கிடைக்கிறது. மீதமுள்ள 45 சதவீத நிலங்களுக்கு கிணறுகள் மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை எடுப்பதற்கு மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே உற்பத்திச் செலவு கூடுதலாவதைக் கருத்தில் கொண்டு இலவச மின்சாரத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

agiculture eb connection

மின்சார இணைப்புகள்

அதன்படி, கட்டணமில்லா வேளாண் உரிமை மின்சாரத் திட்டத்தின் கீழ் 23.65 லட்சம் மின் இணைப்புகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர 4 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாதாரண திட்டம் முதல் கட்டணத் திட்டம் வரை முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். அதேபோல், 2023 ஆம் ஆண்டில் 12,566 விவசாயிகள் ரூ.250 கோடி செலுத்தி தட்கல் திட்டத்தில் காத்திருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டும் 47,554 விவசாயிகள் தட்கல் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் 50 ஆயிரம் புதிய வேளாண் இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழக அரசு புதிய இலவச மின் இணைப்புகளுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவுகளில் 3,215 இலவச இணைப்புகள், சாதாரணப் பிரிவில் 16,785 இணைப்புகள், சுயநிதித் திட்டத்தில் 3,372 இணைப்புகள், விரைவு மின் இணைப்புத் திட்டத்தில் 25,282 (தட்கல்) இணைப்புகள், அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் 1,346 இணைப்புகள் என மொத்தம் 50 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. நடப்பாண்டில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை வழங்கப்பட்ட 7,313 விவசாய மின் இணைப்புகளும் 50,000 மின் இணைப்பு இலக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

அரசு மானியம்

ஒவ்வொரு இணைப்புக்கும் சராசரியாக ரூ.1.5 லட்சம் வீதம், மொத்தம் ரூ.750 கோடி செலவில் விவசாய மின் இணைப்புகளை வழங்க மற்றும் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், விவசாய மின் இணைப்புகளுக்காக ஆண்டுக்கு ரூ.127.56 கோடியை மானியமாக அரசு வழங்கும்.

மொத்தம் 50 ஆயிரம் இணைப்புகளில், இலவச சாதாரணப் பிரிவில் 20 ஆயிரம் இணைப்புகள், விரைவு (தட்கல்) சுயநிதித் திட்டத்தில் 25 ஆயிரத்து 282 இணைப்புகள் சுயநிதி பிரிவில் 3,372, அரசின் பிற திட்டங்களின் கீழ் 1,346 மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

எப்படி விண்ணப்பிப்பது?

விவசாய மின் இணைப்பு பெற, அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகவோ அல்லது உங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இந்த 50 ஆயிரம் மின் இணைப்புகள் 3 முக்கிய விண்ணப்ப வழிகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொதுப்பிரிவு (சாதாரண முன்னுரிமை வரிசை), சுயநிதித் திட்டம் மற்றும் விரைவு சேவைத் திட்டமான 'தட்கல்' திட்டங்களில் வழங்கப்படுகிறது.

தேவையான ஆவணங்கள் என்னென்ன?

விண்ணப்பிக்கும் முன் தேவையானஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். தேவையான இடங்களில் அவை சான்றொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும்.

குறிப்பாக, விவசாயியின் அடையாளச் சான்றாக ஆதார் அட்டை, நில உரிமை ஆவணங்களாக விவசாய நிலத்திற்கான பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் ஆவணங்கள்.

புல வரைபடமாக கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைந்துள்ள இடத்தை குறிக்கும் வரைபடம். கிணறு அல்லது ஆழ்துளைக்கிணறு உங்களுக்கே சொந்தமானது என்பதையும், அதில் ஏற்கனவே மின் இணைப்பு எதுவும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தும் கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் இணைக்க வேண்டும்.

தொழில்நுட்ப விவரங்களாக மோட்டார்- பம்புசெட்டின் குதிரைத்திறன் (எச்.பி) மற்றும் உரிமம் பெற்ற மின் பணியாளரிடம் இருந்து பெறப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

ஃபார்ம் 2

விண்ணப்பதாரர் வசிக்கும் தாலுகாவில் உள்ள மின்சார வாரிய பிரிவு அலுவலகம் அல்லது நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு, விவசாய மின் இணைப்பிற்கான Form-2 விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளவும்.

அந்தப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, அதனுடன் ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும். பொறுப்பு அதிகாரியிடம் படிவத்தை சமர்ப்பித்து, முத்திரையிடப்பட்ட ரசீது அல்லது பதிவு எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பித்ததற்குப் பிறகு இளநிலை பொறியாளர் நிலத்திற்கு நேரில் வந்து, கிணறு, ஆழ்துளைக் கிணற்றைப் பார்வையிட்டு, சர்வே எண்களை சரிபார்த்து, தொழில்நுட்ப ரீதியாக இது சாத்தியமா? என்பதை உறுதி செய்வார்.

முன்னுரிமை திட்ட ஒதுக்கீடு

பொதுப்பிரிவின் கீழ் விண்ணப்பித்தால், விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட தேதியின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும். தட்கல் திட்டத்தை தேர்ந்தெடுத்தால் (விண்ணப்பப்பதிவு திறக்கப்படும் காலங்களில்), நீண்ட காத்திருப்பு பட்டியலைத் தவிர்த்து, முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பைப் பெற, மோட்டாரின் குதிரைத்திறனுக்கு (எச்.பி) ஏற்ப ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

அனுமதி வழங்கப்பட்டு, தொழில்நுட்ப ரீதியான ஒப்புதல் கிடைத்ததும், களப்பணியாளர்கள் வந்து மின் மீட்டரை பொருத்தி, மின் இணைப்பை வழங்குவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+