தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு.. காமராசர் விருது பெறும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்! முழு லிஸ்ட் இதோ!
சென்னை : தமிழ்நாடு அரசின் 2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான 9 விருதுகள் பெறுவோர் பட்டியல் தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான விருதாளர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2023ஆம் ஆண்டுக்க்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வரும் ஜனவரி 16ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகள் வழங்குகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருது பெறுவோர் விவரம்:
திருவள்ளுவர் விருது - நா.கு. இரணியன் பொன்னுசாமி
பேரறிஞர் அண்ணா விருது - உபயதுல்லா
பெருந்தலைவர் காமராசர் விருது - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
மகாகவி பாரதியார் விருது - டாக்டர் இ.ரா. வேங்கடாசலபதி
பாவேந்தர் பாரதிதாசன் விருது - வாலாஜா வல்லவன்
திரு.வி.க விருது - நாமக்கல் பொ.வேல்சாமி
பெரியார் விருது - கவிஞர் கலி.பூங்குன்றன்
கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது - கவிஞர் மு.மேத்தா
அம்பேத்கர் விருது - எஸ்.வி.ராஜதுரை
தேவநேயப் பாவாணர் விருது - முனைவர் இரா. மதிவாணன்
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications