மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பலருக்கு ரூ.1,000 வரவில்லையா? தமிழ்நாடு அரசு மறுப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட 17 லட்சம் பேரில் 50% பேர் இத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

2026 நவம்பர் மாதத்திற்கான உரிமைத் தொகை சுமார் 1.29 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகள் இறப்பு, திட்டத்தில் இருந்து தாங்களாகவே விலகுவதாக தெரிவித்தாலோ அத்தகையை விவரங்கள் மட்டும் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்படுவதாக சமூக பாதுகாப்புத் திட்ட இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

Magalir Urimai Thogai

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இந்த மாதம் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் முதல் கட்டத்தில் இணைக்கப்பட்டு இதுவரை முறையாக உரிமைத்தொகை பெற்று வந்த பல பயனாளிகளுக்கும் இந்த மாதம் ரூ.1,000 உதவித்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்ற புகார்களும் தமிழகம் முழுவதும் பரவலாக எழுந்தன.

பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஆக உரிமைத்தொகையை உயர்த்தி வழங்கப்போவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது ஏற்கெனவே மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 பெற்று வரும் தகுதியுள்ள பெண்களுக்குக்கூட எந்தக் காரணமுமின்றி அந்தத் தொகையை நிறுத்த முற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை குறித்து தவறான தகவல் பகிரப்படுவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த 15 ஆம் தேதி 1,29,97,568 பேரின் வங்கிக் கணக்கில் தலா ரூபாய் 1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக சேர்க்கப்பட்ட 17 லட்சம் பேரில் 50% பேர் நீக்கப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் வழக்கமான புதுப்பித்தல் பணிகள் நடைபெறும். யனாளிகள் இறப்பு, திட்டத்தில் இருந்து தாங்களாகவே விலகுவதாக தெரிவித்தாலோ அத்தகையை விவரங்கள் மட்டும் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்படும். இது வழக்கமான ஒன்று தான் என தமிழக அரசு கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+