தமிழக அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் தரப்போறாரா முதல்வர் ஸ்டாலின்? அகவிலைப்படி உயர்கிறதா?எதிர்பார்ப்பு
சென்னை: அகவிலைப்படி குறித்த அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். எனவே, இதுகுறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வரலாம் என்கிறார்கள்.
நீண்ட நாட்களாகவே, மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 3 மாத காலமாகவே, இந்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ஊழியர்கள் எதிர்நோக்கி காத்திருந்தார்கள்.

அகவிலைப்படி உயர்வு: விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது நல்ல செய்தி வெளியாகலாம் என்றார்கள்.. பிறகு ஆயுதபூஜைகள் வருவதால், அதற்கு முன்பேயே அகவிலைப்படி உயர்வு வெளியாகும் என்றார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், கடந்த வாரம் அதாவது, நவராத்திரி பண்டிகை என்பதால், அதற்கு முன்பேயே அகவிலைப்படி உயர்வுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அமைச்சரவை முன்கூட்டியே ஒப்புதல் வழங்கிவிட்டது..
அந்தவகையில், அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம், 42 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படியானது, 46 சதவீதமாக உயர்கிறது. அதேபோல கெஜட்டட் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளத்தை போனஸாக வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. இதனால், 11.07 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என்கிறார்கள்.
பெருத்த மகிழ்ச்சி: மத்திய அரசு ஊழியர்களை போலலே தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு என்ற கோரிக்கையை தமிழக அரசு ஊழியர்கள் முன்வைத்து வருகிறார்கள். ஏற்கனவே, அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த கோரிக்கையை விடுத்திருந்தது.
அதாவது, தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்கள், ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் மத்திய அரசு வழங்கியது போல 4 சதவிகித அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால், இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை.
கோரிக்கை: இப்போது, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகமும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் மாயவன் அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
அதில், "மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு, இந்த ஆண்டு ஜூலையில் இருந்து கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை, இந்த ஆண்டு ஜூலையில் இருந்து கணக்கிட்டு உடனடியாக வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி பற்றாக்குறை: ஏற்கனவே நிதி பற்றாக்குறை, காலியிடம் நிரப்புவதில் தாமதம், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு போன்றவை நிலவுகிறது.. அரசு தங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்கவில்லை என்ற வருத்தமும் ஊழியர்களுக்கு உள்ள நிலையில், இந்த அகவிலைப்படி உயர்வு கோரிக்கையும் தற்போது சேர்ந்துள்ளது, தமிழக அரசுக்கு பெருத்த நெருக்கடியை உண்டுபண்ணி வருகிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications