அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ் வருதா.. அட, சம்பளமும் எகிறுதா? தமிழக அரசு சொல்லப்போகும் சர்ப்ரைஸ்?
சென்னை: பண்டிகைகள் நெருங்கி வரும்சூழலில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எப்போது வழங்கப்படும் என்ற கேள்வியும் ஆர்வமும் வலுத்து வருகிறது.
இந்த வருடம் தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கிட வேண்டும் என்று போக்குவரத்து துறைக்கு, தமிழக போக்குவரத்து ஊழியர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
அந்த கடிதத்தில், 20 சதவீத போனசை வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். அதுவும், ஒருநாள் முன்பாகவே முன் பணமாக 10 ஆயிரம் வழங்க வேண்டும், இதுகுறித்து உடனடியாக தங்களை அழைத்து பேச்சுநடத்த வேண்டும் என்று கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

போக்குவரத்து துறை: இதையடுத்து, தமிழக அரசு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், 4 நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி தந்திருந்தார். அதில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக தமிழக முதல்வர் முடிவு எடுத்து அறிவிப்பார்... தீபாவளி போனஸ் கேட்டு போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் மனு தந்துள்ளார்கள்.. எனவே, விரைவில் போக்குவரத்து துறை சம்பந்தமான போனஸ் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
அதேசமயம், தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது போனஸ் வழங்கப்படும்? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.. மத்திய அரசு ஊழியர்களுக்கு, கடந்த ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவதை போலவே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும்.. ஆனால், கடன் நெருக்கடி காரணமாக, தமிழக அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் அகவிலைப்படி உயர்வு தரப்படவில்லை.
அகவிலைப்படி: எனினும், 4 சதவீதம் வரைக்கும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்றும், அந்தவகையில் தமிழக அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 25,500 என்றால், ஊழியர்களுக்கு 10,610 வரைக்கும் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டன. ஆனால், அப்படி அறிவிப்பு எதுவுமே வரவில்லை.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. அப்போதும் அறிவிப்பு வரவில்லை.. இப்போது, தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், அகவிலைப்படி அறிவிப்புடன் சேர்த்து, தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகுமா? என்ற இரட்டிப்பு எதிர்பார்ப்பு ஏற்படுள்ளது.
எதிர்பார்ப்பு: காரணம், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு, தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன..
தீபாவளி, மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு அவர்களுக்கு வழங்கவிருக்கும் நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுமா? கடந்த ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுமா? மாநில அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி எப்போது கிடைக்கும்? போன்ற கேள்விகள் வலம்வர துவங்கி உள்ளன..
விரைவில் அறிவிப்பு?: தமிழக அரசு ஊழியர்கள் ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.. அந்தவகையில், ஆளும் தரப்பு மீது அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிகிறது.. அவர்களை "கூல்" செய்யும் விதத்தில், தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications