இருளர் இன மக்களுக்கு இனிப்பான செய்தி.. பாம்பு பிடிக்க அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை
சென்னை: இருளர் இன மக்கள் பாம்புகளை பிடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இருளர் பழங்குடியின மக்கள் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வசித்து வருகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரம், வேட்டையாடுவது, பாம்பு பிடிப்பது, மீன் பிடிப்பது போன்ற தொழில்களை செய்து வந்தனர்.
யார் வீட்டில் பாம்பு நுழைந்துவிட்டாலும் சரி இவர்களுக்கு தகவல் கிடைக்கப்பெற்று அந்த பாம்பை லாவகமாக பிடிப்பார்கள். இவர்கள் எப்படி பாம்பு பிடிப்பார்கள் என்பது ஜெய்பீம் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

காசு
இதன் மூலம் அந்த வீட்டில் கொடுக்கும் காசுதான் இவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தது. ஒரு சில இடங்களில் இருளர் பழங்குடியின பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டு இந்த சங்கத்தில் பதிவு செய்தவர்கள் பாம்பு பிடித்து வந்தனர். அவ்வாறு இவர்கள் பிடிக்கும் பாம்பை சங்கத்திடம் ஒப்படைப்பர்.

பாம்பு விஷம்
அந்த பாம்பிலிருந்து எடுக்கும் விஷத்தை அரசின் உதவியுடன் ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கி வந்தனர். இந்த நிலையில் பல்லுயிர் இனப்பெருக்கம் காரணமாக வன உயிரின சட்டத்தால் பாம்பு பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான இருளர் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.

4 ஆண்டுகள்
இதனால் தங்களுக்கு பாம்பு பிடிக்க அனுமதி வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதனால் பாம்பு பிடிப்போர் சங்கம் உள்ள கட்டடத்திற்கும் தேவையின்றி வாடகை கொடுத்து வருவதாக வேதனை தெரிவித்திருந்தனர்.

தமிழக அரசு அனுமதி
மேலும் தமிழக அரசு காலதாமதமின்றி பாம்பு பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்திருந்தனர். இந்த நிலையில் இருளர் இன மக்கள் பாம்புகளை பிடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. இதனால் இருளர் இன மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications