மாதம் ரூ.1500 வங்கி கணக்கில் தரும் தமிழக அரசு.. மிக அருமையான வாய்ப்பு.. யாருக்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழக அரசு கல்வியில் மேம்பட வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உயர் கல்வியில் சேரும் மாணவ மாணவிகளுக்கு மாதம் 1000 உதவி தொகை தரும் அரசு, அடுத்ததாக இன்னொரு திட்டத்தை செயல்படுத்துகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசு புதுமைப் பெண் திட்டம் மூலம் 3.28 லட்சம் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கி வருகிறது. அதேபோல, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று 'தமிழ்ப்புதல்வன்' திட்டத்தை உருவாக்கி உள்ளது. உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கையை மேலும்அதிகரிக்க, அரசுப் பள்ளிகளிலும்,அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் உன்னத நோக்கத்துடன் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

tn govt notification student tamil nadu government

இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்றால் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து தேர்ச்சிபெற்றவர்களுக்கும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம்வகுப்பு வரை தமிழ்வழியில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு இத்திட்டம் மூலம் மாதம் மாதம் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது.. கலை, அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு படிக்கும் பட்டப் படிப்புகள், 4 ஆண்டு பொறியியல் படிப்புகள், 5 ஆண்டு மருத்துவப் படிப்புகள், 3 அல்லது 4 ஆண்டுகள் படிக்கும் சட்டம், மருத்துவம் சார்ந்த படிப்புகள், அதற்கு இணையான படிப்புகள் படிக்கும் மாணவர்கள், 8 மற்றும் 10-ம் வகுப்பு முடித்து தொழிற்பயிற்சி படிப்பவர்கள் இத்திட்டத்தில் கீழ் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது

அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி கற்கும் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின் கீழும், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி கற்கும் மாணவர்கள் தமிழ் புதல்வன் திட்டம் மூலம் பலன் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி இலக்கியத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட 1,500 மாணவ- மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை மாதம் மாதம் 1500 வழங்கப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதை கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், - தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி இலக்கியத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட 1,500 மாணவ- மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு தமிழக அரசின் 10-ம் வகுப்பு தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் நடத்தப்படும்.

இந்த தேர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 19-ந் தேதி நடைபெறும். எனவே அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் உள்ள தலைமை ஆசிரியர்கள், 10-ம் வகுப்பு தமிழ் ஆசிரியர்கள், 11-ம் வகுப்பு தமிழ் ஆசிரியர்கள் முறையாக பயிற்சி அளித்து மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். வாரத்திற்கு 2 மாதிரி தேர்வு நடத்தப்படும். இதற்கான வினாத்தாள்கள் அனுப்பப்பட்டு வருகிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+