அடி தூள்! காலை உணவு திட்டம் ‘ஃபுல் ஸ்விங்’.. கூடுதல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு!
சென்னை: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வரும் ஆகஸ்டு 25 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக கூடுதல் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்தியாவிற்கே முன்னோடித் திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் விரிவுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இத்திட்டம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை சிற்றுண்டி உணவு திட்டத்தின் விரிவுபடுத்தும் நிகழ்வை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், இந்த திட்டத்தை கண்காணிக்க கூடுதல் அதிகாரிகளை நியமித்து, தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தினந்தோறும் கண்காணிக்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவுத் திட்டம்) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவுத் திட்டம்) ஆகியோருக்கு பொறுப்புகளை கூடுதலாக நிர்ணயம் செய்து அரசு ஆணையிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவருக்கும் காய்கறிகளுடன் 100 மி.லி சாம்பார் மற்றும் 150-200 கிராம் உணவு வழங்கப்படும் எனவும், வாரத்திற்கு இரண்டு முறையாவது உள்ளூரில் கிடைக்கும் சிறுதானியங்களைக் கொண்டு காலை உணவு வழங்கப்படும் எனவும், மாணவர்களுக்கு காலை 8 மணி முதல் 8.50 மணி வரை உணவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications