பகுதி நேர ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு!
சென்னை: தொடர் கோரிக்கைகளுக்கு பிறகு தற்போது பகுதி நேர ஆசிரியர்களின் தொகுப்பூதியத்தை ரூ.10,000லிருந்து ரூ.12,500 ஆக உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் 2012ஆம் ஆண்டு 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி, கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் பாடங்களில் ரூ.5,000 தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தப்பட்டு 10 கல்வி ஆண்டுகள் கடந்து விட்டன.

தற்போது 12 ஆயிரத்து, 483 பேர் ரூ.10ஆயிரம் தொகுப்பூதியம் பெற்று வருகின்றனர். தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் இந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது வரையிலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.10,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்து தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தற்போது பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் 12,105 பகுதி நேர ஆசிரியர்களின் தொகுப்பூதியம் ரூ.10,000ல் இருந்து ரூ. 12,500 ஆக உயர்த்தி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications