இனி 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம்.. அமைச்சர் சொன்ன 17 நாளில் வந்தது அரசாணை.. தமிழக அரசு மாஸ்!
சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள் போராட்டத்தையடுத்து வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், 17 நாட்களில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. சமீபத்தில் சென்னையில் சம வேலை சம ஊதியம், சம்பள உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்களின் போராட்டத்திற்குப் பிறகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும் என தெரிவித்தார். அதன்படி, ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என்று அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியர்களை நேரடி நிர்ணயம் செய்வதற்கான உச்ச வயது வரம்பானது தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினர் 53 வயது வரையும், இதர பிரிவினர் 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 50 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் அரசாணையை பதிவிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "04.10.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்திருந்தோம்.
04.10.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்திருந்தோம்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) October 22, 2023
அதன்படி… pic.twitter.com/d47UkldWwy
அதன்படி 17 நாள்களிலேயே சொன்னதை செய்து முடித்து தற்போது அரசாணையையும் வெளியிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
முக ஸ்டாலின் அவர்களுக்கு ஆசிரியப் பெருமக்களின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், ஆசிரியர் ஆகும் கனவில் இருப்பவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம்












Click it and Unblock the Notifications