ஹய்யா.. வந்தாச்சு வலிமை சிமெண்ட்.. தமிழக அரசின் அப்டேட்டால் தல பேன்ஸ் ஹேப்பியா இருக்கமாட்டாங்களே
சென்னை: தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர புதிய ரக சிமெண்ட் "வலிமை"யை மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் இன்று அறிமுகப்படுத்தி, விற்பனையை துவக்கி வைத்தார்.
கட்டுமான பொருட்களான சிமெண்ட், கம்பி, ஜல்லி, மணல் ஆகியவற்றின் விலையேற்றத்தால் பொதுமக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். சிறியதாக ஒரு வீடு கட்டுவதற்கு கூட சிமெண்ட் விலையை கருத்தில் கொண்டு தள்ளிபோடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வலிமை என்ற பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பொது பட்ஜெட்டில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

புதிய ரக சிமெண்ட்
இதை தமிழக அரசின் வலிமை அப்டேட் என கூறி வந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர புதிய ரக சிமெண்ட் "வலிமை"யை மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் இன்று அறிமுகப்படுத்தி, விற்பனையை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூஸம் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சிமெண்ட் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை என்ன
இந்த சிமென்ட் 2 தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ரூ 350 , ரூ 365 ஆகிய இரு விலைகளில் சந்தையில் வலிமை சிமெண்ட் அறிமுகமாகியுள்ளது. இந்த சிமெண்ட் விலையுடன் கூடுதலாக ரூ 35 போக்குவரத்து செலவுக்கு வசூலிக்கப்படுகிறது. தற்போதைய மூலப்பொருட்களின் விலையின் அடிப்படையில் சிமெண்ட்டின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தின்மை, வன்மை, வல்லமை ஆகியவற்றின் மறுபெயர் வலிமை என்பதால் சிமெண்டிற்கு அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களுக்கும் வலிமை சிமெண்ட் பயன்படுத்தப்படும். வலிமை சிமெண்ட் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

2 ஆண்டுகள் நோ அப்டேட்
இந்த வலிமை என்ற பெயர் நடிகர் அஜித் நடிக்கும் படத்தின் பெயர் என்பதால் அஜித் நடிகர்கள் குஷியாகிவிட்டனர். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் கடந்த 2 ஆண்டுகளாக நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்தில் நடிப்பவர்கள் குறித்த விவரங்கள் மட்டுமே வெளியானது. பின்னர் நீண்ட காலமாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கோ பர்ஸ்ட் டிராக்கோ எதுவும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு அலப்பறை செய்தனர்.

விளம்பர பலகை
கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அஷ்வினிடமும் பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலியிடமும் மைதானத்தில் தல ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டனர். அவரும் அஷ்வினிடம் வலிமை அப்டேட் என்றால் என்ன என கேட்டிருந்தார். அது போல் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது அவரை வரவேற்க வைத்திருந்த விளம்பர பலகைகளின் பின்புறம் வலிமை அப்டேட் என கேட்டிருந்தார். இது போல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசனிடமும் வலிமை அப்டேட்டை நெட்டிசன்கள் கேட்டனர்.

ரசிகர்களுக்கு தல அறிவுரை
அதற்கோ அவர் நான் தேர்தலில் வெற்றி பெற்றால் நிச்சயம் அப்டேட் கிடைக்கும் என கிண்டலாக தெரிவித்திருந்தார். "நேரம் வரும் போது உரிய அப்டேட்டுகள் கிடைக்கும். அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்கவும்" என நடிகர் அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து அண்மையில் வலிமை படத்தில் இடம்பெற்ற பர்ஸ்ட் சாங் வெற மாதிரி பாடல் வெளியானது. இந்த நிலையில்தான் சட்டசபையில் வலிமை குறித்த தமிழக அரசின் அப்டேட் கிடைத்தது. அந்த சிமெண்ட் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலினால் அறிமுகப்படுத்தப்பட்டு வெளிசந்தைக்கு வந்துள்ளது. எனினும் இந்த அப்பேட்டால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார்களே!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications