'விடுதலை 2' படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.. நாளை 9 மணிக்கு முதல் ஷோ!
சென்னை: விடுதலை - 2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள விடுதலை-2' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், நாளை ஒருநாள் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை மொத்தமாக 5 காட்சிகளை திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

விடுதலை 2 நாளை ரிலீஸ்
இந்நிலையில், அதன் அடுத்த பாகமான 'விடுதலை 2' திரைப்படம் நாளை (டிசம்பர் 20) திரைக்கு வருகிறது. விஜய் சேதுபதி, சூரி ஆகியோரோடு மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், சூர்யா சேதுபதி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது விடுதலை 2.
விடுதலை முதல் பாகத்தில், சூரியைச் சுற்றி கதை அமைக்கப்பட்டு இருந்த நிலையில், இரண்டாம் பாகமானது விஜய் சேதுபதியை சுற்றி திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. விடுதலை 2 படத்தில் வன்முறை காட்சிகள் காரணமாக ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு.
8 நிமிடங்கள் கட்
இந்நிலையில், இப்படத்தில் 8 நிமிடங்களை கட் செய்துள்ளது படக்குழு. விடுதலை பாகம் 2 படத்தின் மொத்த நீளம் 2 மணிநேரம் 52 நிமிடங்களாக இருந்த நிலையில், பட வெளியீட்டுக்கு முன்பே 8 நிமிடங்களை குறைத்துள்ளனர். கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெற்றிமாறன் பேசும் வீடியோவை விஜய் சேதுபதி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், விடுதலை 2 படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. வெற்றிமாறனின் அசுரன் உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்த நிலையில், தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி
திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் நடத்தும் நேரத்தை அதிகப்படுத்துவதால், சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாமலும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் மற்றும் பார்வையாளர்கள் திரளாக உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும், திரையங்கத்தினை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்கவும், போதுமான இடம் மற்றும் கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன், இன்ஃபோடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட், நிறுவனத்தார் கோரிய "விடுதலை 2" என்ற தமிழ் திரைப்படத்திற்கு 20.12.2024 அன்று காலை 9 மணிக்கு ஒரு சிறப்பு காட்சியினை திரையிட அனுமதி வழங்குவது குறித்து, உரிய விதிமுறைகளுக்குட்பட்டு, அரசளவில் முடிவெடுக்கலாம் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications