Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பகீர் தகவலை வெளியிட்ட தமிழ்நாடு அரசு.. வளமெல்லாம் கொள்ளை! 4 ஆண்டில் 16 லட்சம் டண் தாது மணல் கடத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுக்கு இடையிலான கால கட்டத்தில் மட்டும் சுமார் 16 லட்சம் டண் தாது மணல் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சட்டவிரோதமாக தாது மணல் அள்ளப்படுவது தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தாது மணல் அள்ளுவதற்கும், சேமித்து வைப்பதற்காக தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதை தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் இருந்து சுமார் 1.5 கோடி டன் தாது மணல் பறிமுதல் செய்யப்பட்டு அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

TN government said in HC that 16 lakh tonnes of ore sand has been smuggled in 4 years

பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்டு இருந்த தாது மணல் சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து தனியார் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது. விசாரணையின் போது, தாது மணல் சேகரிக்கப்பட்டிருந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டு சட்ட விரோதமாக தாது மணல் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

இதனை அடுத்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மீண்டும் ஆய்வு செய்ததில், 2018 முதல் 2022 ஆண்டு வரை இடையேயான ஆண்டுகளில் மட்டும் சுமார் 16 லட்சம் டன் அளவிலான தாது மணல் சட்ட விரோதமாக கடத்தப்பட்டதாக தெரிய வந்து உள்ளது. மேலும் சுமார் 6,449 டன் அளவிலான மோனோசைட் என்ற கனிமங்களும் கடத்தப்பட்டதாக தெரிய வந்து இருக்கிறது.

இதனை தொடர்ந்து தற்போது 24 மணி நேரம் காவல்துறை கண்காணிப்பில் தாது மணல் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் இந்த அறிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வி.வி மினரல்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+