அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. கடன், முன்பணம் பெறும் நடைமுறை இனி ரொம்ப ஈஸி.. வெளியானது அரசாணை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கணினி முன்பணம், இருசக்கர வாகன முன்பணம் மற்றும் 4 சக்கர வாகன முன்பணம் ஆகியவற்றைப் பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் நிதி வழங்கும் நடைமுறைகளை எளிதாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளில் அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் மற்றும் கோரிக்கைகள் மீதான பதிலுரையை நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். அதன்படி, தற்போது அரசு ஊழியர்கள் திருமணத்திற்கு முன்பணம் பெறுவதற்கு திருமண தேதிக்கு 180 நாட்களுக்கு முன்புவரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இதில் திருத்தங்கள் செய்யப்பட்டு திருமணமான நாளில் இருந்து 60 நாட்கள் வரை விண்ணப்பங்களை அனுமதிக்க விதிமுறைகள் மாற்றப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

Tn government government employees tvk

இந்த புதிய நடைமுறை அரசு ஊழியர்களுக்கு கூடுதல் வசதியை வழங்குவதுடன் தாமதம் மற்றும் தவிர்க்க முடியாத சூழல் காரணமாக தகுதியிருந்தும் அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தின் பயனை இழக்காமல் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்திருந்தார்.

கடன்கள் மற்றும் முன்பணம் எளிதாக பெறும் வகையில் நடைமுறைகளை எளிமைப்படுத்தி அரசு ஊழியர்கள் நலன்கள் சார்ந்த நிதி உதவி விரைவாக கிடைக்க உரிய வழிவகை செய்யப்படும் என்றும், சொந்த வீடு வாங்குவது என்பது அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் கனவாக இருக்கிறது. எனவே வீடு வாங்குவதற்காக அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் வழங்கும் முன்பணம் பெறுவதற்கான நடைமுறை எளிமையாகவும் அதேநேரம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி தற்போது அரசு ஊழியர்கள் கடன் மற்றும் முன்பணம் பெறும் நடைமுறையை எளிமையாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இதுதொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், ஏற்கெனவே உள்ள நடைமுறைகள், தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் மற்றும் இனிமேல் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஆகியவை ஒப்பீட்டு அட்டவணையாக வெளியிடப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் முன்பணத்தை பெற ஆறு ஆண்டுகள் தகுதி தேவை இல்லை, தகுதிகாண் பருவம் முடிந்திருந்தாலே அரசு ஊழியர்கள் முன்பணத்திற்காக விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கணினி முன்பணம், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன முன்பணம் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என்ற நிதித்துறை அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அதன்படி 6 வருடம் நிறைவு செய்திருந்தாலே முன்பணம் வாங்க முடியும் என்ற நடைமுறையை திருத்தி தகுதிகாண் பருவம் (Probation Period) நிறைவு செய்திருந்தாலே விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட திருத்திய நடைமுறைகள் அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து கணினி முன்பணம், இருசக்கர வாகன முன்பணம் மற்றும் நான்கு சக்கர வாகன முன்பணம் கோரி பெறப்படும் விண்ணப்பங்களுக்குப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+