தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா? கவலையே வேண்டாம்.. 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து 11,176 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி வியாழக்கிழமை வருகிறது. தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தீபாவளிக்கு வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

diwali 2024 tnstc special bus

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பண்டிகை காலங்களில் ஆண்டு தோறும் மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அந்தவகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தீபாவளியையொட்டி 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து 11,176 பேருந்துகள் அக்டோபர் 28 முதல் 30 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் உடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,910 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து: சென்னையில் கிளம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் என மூன்று மையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் 5.83 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை மற்றும் வெளியூர்களுக்கு திரும்பும் வகையில் நவம்பர் 2ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை 9,441 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டம். இந்தநிலையில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த ஆண்டு மூன்று இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், எந்த பேருந்து நிலையத்தில் இருந்து எந்த வழித்தடத்தில் பேருந்துகள் செல்லும் என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம்:

புதுச்சேரி / கடலூர் / சிதம்பரம் மார்க்கம் திருச்சி மார்க்கம், மதுரை /தூத்துக்குடி / செங்கோட்டை மார்க்கம், திருநெல்வேலி மார்க்கம், சேலம் / கோயம்புத்தூர் மார்க்கம், வந்தவாசி /போளூர் / திருவண்ணாமலை மார்க்கம், கும்பகோணம் / தஞ்சாவூர் மார்க்கம் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து புறப்படும்.

கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்:

கிழக்கு கடற்கரை (ECR) மார்க்கம், காஞ்சிபுரம் / வேலூர் / பெங்களூர் மார்க்கம், திருத்தணி மார்க்கம் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையம்:

பொன்னேரி / வாத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மார்க்கம் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி சேலம் கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

முன்பதிவு செய்ய: முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணைய தளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+