மகளிர் உரிமைத் தொகை தமிழக அரசின் சூப்பர் பிளான்.. ரூ.1 லட்சம் கோடி நிதி மோசடி? டெல்லி வரை போன புகார்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தற்போது பல்வேறு அரசியல் விமர்சனங்கள் மற்றும் நிதி மடைமாற்ற புகார்களால் தேர்தல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, தலித் மக்களுக்கான சிறப்பு நிதி இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு ஆளும் தரப்பிற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தினால் பயனாளிகளின் வரவேற்பு இருந்தாலும், மறுபுறம் நிபந்தனைகள் மற்றும் நிதி முறைகேடு புகார்கள் திமுகவின் தேர்தல் வெற்றியை பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.. என்ன நடந்தது?
மகளிர் உரிமைத் தொகை திட்டம், இல்லத்தரசிகளின் உழைப்பினை அங்கீகரிப்பதோடு அவர்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய முன்னெடுப்பாகும்.

இந்த 1000 ரூபாய் ஊக்கத்தொகை, ஏழ்மையான குடும்பங்களில் உள்ள பெண்களுக்குத் தங்களின் அத்தியாவசிய தேவைகளான மருந்து செலவுகள், கல்விச் செலவுகள் மற்றும் அன்றாடச் சிறு தேவைகளை மற்றவர்களைச் சார்ந்து இருக்காமல் நிறைவேற்றிக்கொள்ள பெரிதும் உதவுகிறது.
மகளிர் உரிமைத் தொகை
மேலும், பெண்களின் வங்கி கணக்கிற்கே நேரடியாகப் பணம் செல்வதால், குடும்ப முடிவுகளில் அவர்களின் சுயமரியாதையும் அதிகாரமும் அதிகரிப்பதோடு, கிராமப்புறப் பொருளாதாரச் சுழற்சியையும் இது ஊக்கப்படுத்துகிறது.
ஆனால் எதிர்க்கட்சிகளோ இந்த திட்டம் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து பெண்களுக்கும் வழங்காமல் நிபந்தனைகள் மூலம் பலரைத் தகுதியற்றவர்களாக மாற்றியதே "மக்களுக்குச் செய்த துரோகம்" என்பது பாஜகவின் முக்கிய குற்றச்சாட்டு.
மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு
மின்சாரக் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வு மூலம் மக்களிடம் பணத்தைப் பறித்துவிட்டு, அதில் ஒரு பகுதியை மட்டும் உதவித்தொகையாகக் கொடுப்பது ஏமாற்று வேலை என்றும், தகுதி வரம்புகள் என்ற பெயரில் பல ஏழைப் பெண்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் விமர்சிக்கின்றனர். சுருக்கமாக, இது உண்மையான மகளிர் மேம்பாட்டிற்கானது அல்லாமல், அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தற்காலிகக் கவர்ச்சித் திட்டம் என்பதே அவர்களின் வாதமாக உள்ளது..
இப்படிப்பட்ட சூழலில், மத்திய அரசு வழங்கிய, பட்டியலின மக்களுக்கான சிறப்பு திட்ட நிதியை, திமுக அரசு, மகளிர் உரிமைத் தொகை வழங்க பயன்படுத்தியதாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையரகத்தில், தலித் விடுதலை இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
பட்டியல், பழங்குடியின மக்கள்
இது குறித்து, அதன் தலைவர் கருப்பையா அளித்துள்ள மனுவில், ":மகளிர் உரிமைத் தொகையாக, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம், 2023ல் துவக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கென தமிழக அரசு தனியாக நிதி ஒதுக்காமல், பட்டியல், பழங்குடியின மக்களுக்காக, மத்திய அரசு வழங்கிய சிறப்பு உட்கூறு திட்ட நிதியை பயன்படுத்தி உள்ளது. அதன்படி, சமூக பாதுகாப்பு மற்றும் நலத் துறை என்ற தலைப்பில், எஸ்.சி., - எஸ்.டி., சிறப்பு உட்கூறு திட்ட நிதியை, மகளிர் உரிமைத் தொகை என்ற துணை தலைப்பின் கீழ் மடைமாற்றம் செய்துள்ளனர். இதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு அதிமான தொகை, இத்திட்டத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.
திமுக - பாஜக அரசு
அதனால், பட்டியல், பழங்குடியின மக்கள் வசிக்கும் இடங்களில், எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை.எனவே, எஸ்.சி., - எஸ்.டி., மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு வழங்கிய நிதியை, இவ்வாறு மடைமாற்றம் செய்துள்ள அதிகாரிகள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், 5000 ரூபாய் வரை நிலுவைத் தொகையோடு சேர்த்து வழங்கி வாக்குகளை அள்ளலாம் எனத் திட்டமிட்ட திமுகவுக்கு, இந்த தீவிரமான விமர்சனங்கள் பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றன.
வாக்குகள் பாதிக்குமா?
"அனைவருக்கும்" என்று சொல்லிவிட்டு நிபந்தனைகள் மூலம் கோடிக்கணக்கான பெண்களைப் புறக்கணித்தது தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி எனப் பொதுமக்கள் கருதுவது திமுகவிற்கு பலவீனமான புள்ளியாக மாறியுள்ளது. ஒருபுறம் நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு திணறினாலும், மறுபுறம் இந்த திட்டத்தை சுற்றியுள்ள அதிருப்தியும், "வாக்குறுதி மீறல்" என்ற குற்றச்சாட்டும் தேர்தல் களத்தில் அக்கட்சிக்கு ஒரு பெரிய சவாலாகவும் அதிர்ச்சியாகவும் உருவெடுத்துள்ளது...!!
-
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications