Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தூக்கு தண்டனை! சட்டசபையில் நிறைவேறிய மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வழி செய்யும் சட்ட மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா மற்றும் மத்திய அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா (பிஎன்எஸ்எஸ்) ஆகிய சட்டங்களை தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான சட்டமசோதா ஆகிய 2 சட்ட மசோதாக்களை தமிழக சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பின்னர் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

governor assembly tn government

சட்டத் திருத்த மசோதா

12 வயதுக்குட்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்தால் கடுங்காவல் தண்டனை அல்லது மரண தண்டனை, 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் கடுங்காவல் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை, மீண்டும், மீண்டும் குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அல்லது கடுங்காவல் ஆயுள் தண்டனை விதிக்க இந்த சட்ட மசோதாக்களில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆசிட் வீசி கொடுங்காயம் ஏற்படுத்தினால் அபராதத்துடன் கடுங்காவல் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை, ஆசிட் வீசுவதாக மிரட்டினால் அபராதத்துடன்10 ஆண்டுகள் முதல் ஆயுட்கால சிறை தண்டை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஆளுநர் ஒப்புதல்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்பதல் வழங்கியுள்ளார். ஆளுநரின் ஒப்புதலை அடுத்து, இந்த சட்டத் திருத்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

தண்டனை விவரங்கள்

இந்த சட்டத் திருத்தத்தின்படி தண்டனையில் கடுமையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டிஜிட்டல் முறை, மின்னணு ரீதியான குற்றங்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் என உள்ளது. இதை, முதல் தண்டனை தீர்ப்பின் பேரில் 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் என நீட்டிக்கப்படும். இரண்டாவது அல்லது தொடர்ச்சியான தண்டனை தீர்ப்பின்போது 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

வன்கொடுமையால் ஏற்படும் மரணங்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதமும், மரணம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படும் வன்கொடுமைகளுக்கு ஆயுள் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் என உள்ளது. தற்போது அது முறையே 15 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் என விதிக்கப்படும்.

அதேபோல, வன்கொடுமைக்கு 14 ஆண்டு கடுங்காவல் முதல் அபராதத்துடன் ஆயுட்கால சிறை தண்டனை. காவல் துறை அலுவலர், சிறைச்சாலை அலுவலர், அரசு அலுவலர், மருத்துவமனை பணியாளர் வன்கொடுமை குற்றவாளியாக இருந்தால் 20 ஆண்டு கடுங்காவல் முதல் ஆயுட்கால சிறை தண்டனை. 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்தால் கடுங்காவல் தண்டனை அல்லது மரண தண்டனை. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் அபராதத்துடன் கடுங்காவல் ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

மரண தண்டனை

18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் கடுங்காவல் ஆயுள் அல்லது மரண தண்டனை. மீண்டும் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது கடுங்காவல் ஆயுள் தண்டனை. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் அபராதத்துடன் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் அல்லது பலத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினால் அபராதத்துடன் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை. பெண்ணை பின்தொடர்ந்தால் அபராதத்துடன் 5 ஆண்டு வரை சிறை தண்டனை. இதே குற்றம் தொடர்ந்தால், அபராதத்துடன் 7 ஆண்டு வரை சிறை தண்டனை. ஆசிட் வீசி கொடுங்காயம் ஏற்படுத்தினால் அபராதத்துடன் கடுங்காவல் ஆயுள் அல்லது மரண தண்டனை. ஆசிட் வீசுவதாக மிரட்டினால் அபராதத்துடன் 10 ஆண்டு முதல் ஆயுட்கால சிறை தண்டனை வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+