ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கை தட்டலாமே .. சட்டப்பேரவையை கலகலப்பாக்கிய ஆளுநரின் மாஸ் வீடியோ..!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின்போது அவையில் அமைதியாக இருந்த எம்எல்ஏக்களை, ஏன் அமைதியாக இருக்கிறீர்கள், கை தட்டுங்கள் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சொன்னவுடன் அங்கு அவையில் சிரிப்பலை எழுந்தது.
Recommended Video
பட்ஜெட் கூட்டத்தொடர், சட்டசபை கூட்டத் தொடரின் போது ஆளுநர் உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தின் சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அப்போது அவர் தமிழில் வணக்கம் என கூறி உரையை தொடங்கினார்.

கொள்கைகள்
அவர் தொடர்கையில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டுள்ளது தமிழக அரசு. எந்த பாரபட்சமும் இன்றி, அனைவருக்குமான அரசாக செயல்படும். மக்களாட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சுயாட்சி
மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற தனது தலையாய இலக்கினை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்துவோம். மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம்.

உரிமை
மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்பட்டால் அரசியலமைப்பின் துணையோடு கடுமையாக எதிர்க்கும் என்றார். பின்னர் நீட் தேர்வு ரத்து செய்வதற்கான சட்ட முன்வடிவு, தமிழக அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியீடு, தமிழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.

எம்எல்ஏ
அப்போது அவையில் இருந்த எம்எல்ஏக்கள் அனைவரும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர் இதை கவனித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கை தட்டுங்கள் என சொல்லி அவையை கலகலப்பாக்கினார்.

அவை
இதனையடுத்து ஆளுநரின் ஒவ்வொரு அறிவிப்புக்கும் எம்எல்ஏக்கள் மேஜைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். பொதுவாக அவையில் கட்சி பேதமின்றி அனைவரையும் சிரிக்க வைப்பவர் துரைமுருகன். இன்று ஆளுநரும் அவையை கலகலப்பாக்கியது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications