Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வை திடீரென ரத்து செய்த ஆளுநர் மாளிகை.. சொன்ன காரணம் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை நடைபெற இருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வை திடீரென ரத்து செய்துள்ளது ஆளுநர் மாளிகை.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஏரிகள், குளங்கள் நிரம்பி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக மாறி வருகிறது. பேரிடர் மீட்பு குழுக்கள், தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 TN Governor decided to cancel Christmas celebration in raj bhavan

இந்நிலையில், நேற்று டெல்லிக்கு சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை விடுத்தார். மேலும், தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

டெல்லியில் பிரதமரை சந்தித்த பின்னர் அங்கிருந்து நேரடியாக தூத்துக்குடி, நெல்லைக்கு சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை சென்னை திரும்பும் முதல்வர் ஸ்டாலின், பின்னர் தென் மாவட்ட வெள்ளப் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அதைத்தொடர்ந்து இன்று இரவு விமானம் மூலம் மதுரை சென்று தங்கும் முதலமைச்சர், நாளை சாலை மார்க்கமாக நெல்லைக்குச் சென்று அங்கு வெள்ள பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உள்ளார். தொடர்ந்து, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

இதற்கிடையே, நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசு அதிகாரிகளுடன் தென்மாவட்ட புயல், வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்க மாநில அரசு பிரதிநிதிகளுக்கு தலைமைச்செயலர் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், யாரும் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில், சில மத்திய அரசின் நிறுவனங்கள், சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்களது பணியாளர்களை பணியமர்த்த முடியவில்லை என்று கூறியதாகவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தென் மாவட்ட வெள்ள பாதிப்புகள் காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளது ஆளுநர் மாளிகை. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கனமழை மற்றும் கடும் வெள்ளம் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நிலவும் தீவிர சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 21.12.2023 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவிருந்த "அட்வென்ட் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை" ரத்து செய்ய தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முடிவு செய்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+