தமிழக ஆளுநர் பன்வாரிலால் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் சந்திப்பு.. 7 தமிழர்கள் விடுதலை ஆவார்களா?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Rajiv Gandhi case: தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்.. மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார்- வீடியோ

    சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களை விடுவிப்பது தொடர்பான முடிவு எடுப்பது தொடர்பாக பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஆலோசனை நடத்தினார். இதேபோல் அவர் பிரதமர் மோடியையும் சந்தித்து பேச உள்ளார்.

    ஏனெனில் தமிழக அரசு இதுவரை ஆளுருக்கு பச்சை கொடி காட்டிவந்த நிலையில், சஞ்சய் தத் விடுதலை விவகாரம் காரணமாக மத்திய அரசு, தமிழக அரசியல் கட்சிகளின் நெருக்கடி கொடுத்தன. இதற்கிடையில் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் ஆளுநர் விரைவில் முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே21ம் தேதி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தின் போது தற்கொலைப்படை தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார்.

    ஆயுள் தண்டனை

    ஆயுள் தண்டனை

    இவ்வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகிய மூவருக்கு தூக்குத்தண்டனையும், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்ட நால்வருக்கும் ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டது. தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பி இருந்தார்கள், இம்மனு குறித்து குடியரசுத் தலைவர் குறித்த காலத்தில் முடிவு எடுக்காமல் காலதாமதமானதாக கூறி உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

    ஜெயலலிதா அறிவிப்பு

    ஜெயலலிதா அறிவிப்பு

    இதனிடையே 2014ம் ஆண்டு தமிழகத்தின் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக அறிவித்தார். இதற்காக மத்திய அரசின் கருத்தை கோரியிருந்தார். ஆனால் ஆனால், மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த வழக்கு என்பதால், இந்த விவகாரத்தில் தாங்கள்தான் முடிவெடுக்க முடியுமென மத்திய அரசு அறிவித்தது.

    உச்சநீதிமன்றத்தில் வழக்கு

    உச்சநீதிமன்றத்தில் வழக்கு

    இதனிடையே கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி, 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக மத்திய அரசின் கருத்தை அறிய 3 நாட்கள் அவகாசம் அளித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.

    ராமதாஸ் கேள்வி

    ராமதாஸ் கேள்வி

    நடிகர் சஞ்சய் தத் மத்திய அரசின் ஆயுதச் சட்டத்தின்படி தான் தண்டிக்கப்பட்டார் என்பதால் அவரின் தண்டனையை குறைத்து, முன்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. ஆனால், மராட்டிய மாநில அரசு, இது தொடர்பாக மத்திய அரசுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் சிறை விதிகளின் அடிப்படையில் சஞ்சய் தத்தை தன்னிச்சையாக விடுதலை செய்துள்ளது. இது நடந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை மத்திய அரசு தலையிடவில்லை. ஆனால் தமிழகத்தில் 7 பேர் விடுதலையின் மீது மட்டும் மத்திய அரசு அநீதியாக நடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் தெரிவித்து இருந்தார்.

    மத்திய அரசு பச்சை கொடி

    மத்திய அரசு பச்சை கொடி

    இந்நிலையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார். இதேபோல் பாஜக மாநிலங்களவை எம்பி இல கணேசன், பேரறிவாளன் உள்ளிட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    அமித் ஷா உடன் சந்திப்பு

    அமித் ஷா உடன் சந்திப்பு

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவர் 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்கப்போவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசப்போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் சற்று முன்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசினார். சுமார் 15 நிமிடங்கள் இருவரும் பேசிக்கொண்ட நிலையில்,
    மரியாதை நிமர்த்தமாக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+