ரகசியமாக பேசி முடிவெடுத்தார்.. சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்!
சென்னை : சட்டப்பேரவையில் தான் உரையாற்றிவிட்டு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பதற்காக அவையில் காத்திருந்ததாகவும், ஆனால், சபாநாயகருடன் ரகசியமாக பேசி முதலமைச்சர் தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததாகவும் அதன் காரணமாகவே, சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறியதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கில நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியதில் தொடங்கிய பிரச்சனை இன்னும் நீடித்து வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக பொது நிகழ்ச்சிகளில் பேசுவது, திராவிட மாடலை விமர்சிப்பது, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை மாணவர்களிடம் கூறுவது என அடுத்தடுத்து திமுக அரசின் கொள்கைக்கு எதிராக ஆளுநர் பேசுவதால் மோதல் முற்றியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சட்டபையில் ஆளுநர் உரையாற்றும்போது திராவிட மாடல், பெரியார், அண்ணா ஆகிய வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி பேச மறுத்தார். இதன் காரணமாக ஆளுநர் முன்னிலையிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து அதிரடி காட்டினார். இதையடுத்து, உடனடியாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக முதலமைச்சர் சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது சட்டமன்றத்தில் பேசிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆளுநர் மாளிகைக்கு தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் வழங்கப்படும் நிதியானது 50 லட்சம் ரூபாய் என்பதில் இருந்து திடீரென 2019ஆம் ஆண்டு 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதாகவும், அந்த 5 கோடி ரூபாயில் 4 கோடி ரூபாய் தொண்டு நிறுவனத்திற்கு நேரடியாக செலுத்தப்பட்டதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆங்கில நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ள ஆளுநர் ரவி, அதில் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். திமுக அரசு முன்வைத்து வரும் முழக்கமான திராவிட மாடல் என்ற ஒன்றே கிடையாது என்றும், ஒரே நாடு ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு எதிரானது திராவிட மாடல் வாசகம். சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதே திராவிட மாடல் என்ற முழக்கம் என்றும் கூறியுள்ளார்.
இதன்காரணமாகவே, சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த சில பகுதிகளை தவிர்த்துவிட்டு வாசித்ததாகக் கூறினார். தனது உரைக்கு பிறகு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பதற்காக அவையில் காத்திருந்ததாகவும், ஆனால், சபாநாயகருடன் ரகசியமாக பேசி முதலமைச்சர் தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இருந்து பாதியில் வெளியேறியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications