இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது.. ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!
சென்னை: இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என விவாதிக்க வேண்டிய நேரம் இது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் ஏற்று கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் (இந்திய அரசியல் சாசன தினம்) கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1949-ல் நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டது. இது ஜனவரி 26, 1950 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில், சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரசமைப்பு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது. மிகுந்த அழுத்தங்களுக்கு இடையே அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது. நீதிமன்றங்களில் மட்டும் இல்லாமல் சட்டப் பல்கலைக்கழகங்களிலும் அரசமைப்புச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்.
சுதந்திரத்திற்காக போராடும்போது நாம் ஒற்றுமையாக இருந்தோம். தற்போது அவரவர் தாய் நிலம் என்றும் தாய்மொழி என்றும் பிரிந்து கிடக்கிறோம். மாநிலங்கள் என்ற அளவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளோம். நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பல்வேறு கருத்துகள் இங்கே உள்ளன. தற்போதைய காலத்தில் சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பது விலை உயர்ந்ததாக உள்ளது." எனப் பேசியுள்ளார் தமிழக ஆளுநர் ரவி.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதால் தமிழக அரசு ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. இதற்கிடையே, பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கில் அண்மையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது.
அப்போது, "மாநிலத்தின் ஆளுநராக அரசியலமைப்பில் சில அதிகாரங்கள் இருந்தாலும், அவற்றைக் கொண்டு சட்டமன்றத்தின் அதிகாரத்தை முறியடிக்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கே உண்மையான அதிகாரம் இருக்கிறது" என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர் ஆளுநர் என்ற முறையில் மசோதாவை வெறுமனே நிறுத்திவைப்பது, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் செயல்பாட்டை ஆளுநர் வீட்டோ செய்வதாக அமையும். அத்தகைய நடவடிக்கையானது, நாடாளுமன்ற ஆட்சிமுறையின் அடிப்படையில் அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானது." என தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டது.
ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 200 வழங்கும் அதிகாரங்களைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி இருந்த நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தையே கேள்விக்கு உட்படுத்தும் வகையில் ஆளுநர் ரவி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications