'தமிழ்நாட்டு மக்கள்' நலன் வேண்டி காஞ்சிபுரம் சங்கரமடத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பூஜை!
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காஞ்சிபுரம் சென்று காஞ்சி காமகோடி பீடத்தில் நடைபெற்ற பூஜையில் மனைவியுடன் பங்கேற்றார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மனைவி லக்ஷ்மியுடன் நேற்று காஞ்சிபுரம் சென்றார். காஞ்சிபுரத்தில் கோவில் தரிசனம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

ஆளுநர் ரவி மற்றும் லக்ஷ்மி ரவி, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தில் நடந்த பூஜையில் பங்கேற்று தமிழ்நாட்டு மக்கள் நலம் பெற வேண்டிக் கொண்டனர்.

ஆளுநர் ரவி மற்றும் லக்ஷ்மி ரவி, காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

ஆளுநர் ரவி மற்றும் லக்ஷ்மி ரவி, காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயிலில் அனைவருக்கும் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வேண்டிக் கொண்டனர்.

ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன தர்மத்தைப் பரப்ப வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: மாணவர்களும் ஆசிரியர்களும், சனாதன தர்மத்தைப் பரப்புவதில் காஞ்சி மடத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பற்றி எப்போதும் விழிப்புடன் இருந்து தேசத்தை கட்டியெழுப்பவும், அமிர்தகாலத்தில் விஸ்வகுரு பாரதத்தை உருவாக்கவும் தங்களையே அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்.
சனாதன தர்மம் நித்தியமானது, அனைத்தையும் உள்ளடக்கியது மற்றும் பாரதத்தின் ஆன்மா. தேசத்தின் எதிரிகள் அதை ஒழிக்க முயல்கின்றனர். மீண்டும் ஒருமுறை பாரதத்தை உடைப்பதே அவர்களின் மறைமுக செயல்திட்டம். ஜி20 தலைவர்களின் உச்சிமாநாட்டில் சனாதன தர்மத்தின் முக்கிய சாரமான வசுதைவ குடும்பகத்தை உலகமே ஏற்றுக்கொண்டது. இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
காஞ்சிபுரத்துக்கு நேற்று காலை வருகை தந்த ஆளுநர் முதலில் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் மாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். அங்கு ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலய சிறப்புகள்
ஆளுநரிடம் விளக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கபப்ட்டது. சிறப்பு அர்ச்சனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து காஞ்சி சங்கர மடம் சென்று தீபாரதனையில் ஆளுநர் ஆர்.என்.ரவி. பங்கேற்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications