மக்களுக்கு செம குஷியான அறிவிப்பு.. ரேஷன் கடைகளில் வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு!
சென்னை: பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி சேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய முன்பணமாக ரூ.200 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்காக ரூ. 200 கோடி முன்பணமாக ஒதுக்கீடு செய்யப்பட்டதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், எதிர்வரும் 2024 பொங்கல் பண்டிகையை ஒட்டி வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்காக 1,68,00,000 எண்ணிக்கையிலான சேலைகள் மற்றும் 1,63,00,000 வேட்டிகளை உத்தேச உற்பத்தி திட்ட இலக்காக நிர்ணயம் செய்து வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வேட்டி, சேலையினை விநியோகிக்கும் நடைமுறையை முடிவு செய்ய ஏதுவாக, கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய்த் துறை தலைமையில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், வருவாய்த் துறை மற்றும் கைத்தறி ஆணையர் ஆகியோர் அடங்கிய குழுவினை அமைக்க உத்தரவிடப்படுகிறது.
வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வேட்டி சேலைகள் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய, ரேஷன் கடைகளின் விற்பனை முனையத்தில் (Polnt of Sale Machine) வேட்டி சேலைகளை வழங்கும்போது விரல் ரேகை பதிவு (Bio metric Authentication) கட்டாயமாக்கப்படுகிறது.
இதனைத் தவறாது செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆணையர், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications