ஹேப்பி நியூஸ்... நவம்பர் 6-ம் தேதியும் அரசு விடுமுறை... 4 நாட்களும் தீபாவளி கொண்டாட்டம் தான்..!
சென்னை: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் வரும் சனிக்கிழமை (நவ.6-ம் தேதி) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது வாரத்தின் முதல் சனிக்கிழமையான நவம்பர் 6-ம் தேதியும் விடுமுறை தினமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பு சொந்த ஊர்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்றவர்களுக்கும் செல்ல இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. நாளை முதல் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதாலும் அரசு அலுவலர்கள் இன்றே கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிட்டதாலும் இந்த வாரம் முழுவதும் அரசு அலுவலகங்கள் சார்ந்த அனைத்து பணிகளும் தேக்கம் அடையக் கூடும்.
இதனிடையே தீபாவளி பண்டிக்கைக்கு ஒன்று சேர்ந்தார் போல் 4 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கு ஏதுவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அரசு அறிவித்து இந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என்பதால் அந்நிறுவனங்களில் பணியாற்றக் கூடியவர்கள் தமிழக அரசின் இத்தகைய அறிவிப்பை ஏக்கத்துடன் பார்க்கின்றனர். தீபாவாளி பண்டிகையை கொண்டாட லட்சக்கணக்கானோர் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை அரசு பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதால் அந்த வேலை நாளை ஈடு செய்யும் செய்யும் வகையில் நவம்பர் 20-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்துள்ளது தமிழக அரசு. நவம்பர் 6-ம் தேதி சனிக்கிழமை என்பதால் இதற்கு ஈடாக மற்றொரு தேதியை வேலை நாளாக தமிழக அரசு அறிவிக்கவில்லை.
தமிழக அரசின் விடுமுறை அறிவிப்பு மாநில நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அலுவலகங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனிடையே வங்கி, அஞ்சலகம், ரயில்வே அலுவலகம் போன்ற மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனத் தெரிகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications