கலர் மட்டும் இல்லை! பஸ்க்கு உள்ளேயும் மாற்றங்கள்! சீரமைக்கப்பட்ட பேருந்துகளை தொடங்கி வைத்த ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் சீரமைக்கப்பட்ட அரசு பேருந்துகள் மஞ்சள் நிறமாக மாற்றப்பட்டுள்ளன. நிறம் மட்டும் இன்றி பேருந்துகளில் இருக்கை வசதி விரிவாக இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தொலை தூரங்களுக்கு செல்லும் பேருந்துகள், நகர பேருந்துகள், மற்றும் விரைவு பேருந்துகள் உள்ளிட்டவை இயக்கப்பட்டு வருகின்றன. ஏழை எளிய மக்கள் முதல் நடுத்தர வர்க்க மக்களுக்கு போக்குவரத்து தேவையை பெரிதும் பூர்த்தி செய்வது அரசுபேருந்துகள் தான்.

தொலை தூர இடங்களுக்கு கூட தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் எஸ்.இ.டி.சி பேருந்துகளையே அதிகம் நாடுகின்றனர். நகர பேருந்துகளில் மகளிருக்கு கட்டணம் இல்லா பயண சேவை வழங்கப்படுகிறது. நகர பேருந்துகளை பயணிகள் எளிதில் கண்டுபிடிக்க ஏதுவாக அண்மையில் பிங்க் நிறத்தில் மாற்றப்பட்டன.
பிற நகர பேருந்துகள் சிவப்பு நிறத்தில் இயக்கப்படுகின்றன. வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் நீல நிறத்திலும் விரைவு பேருந்துகள் வெள்ளை நிறத்திலும் இயக்கப்படுவதை காண முடிகிறது. இந்த நிலையில், அரசு போக்குவரத்து கழகத்திற்கு 1000 பேருந்துகளை வாங்கவும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ.500 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. அதன்படி, பேருந்துகள் சீரமைக்கப்பட்டு பேருந்துகளுக்கு மஞ்சள் வர்ணம் பூசப்பட்டது.
சென்னை, பெங்களூர், திருச்சி, கரூர், உள்ளிட்ட இடங்களில் பேருந்துகளை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன. அதன்படி பேருந்துகளை புதுப்பித்து, அவற்றுக்கு மஞ்சள் வா்ணம் பூசும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இவற்றில் முதல்கட்டமாக 100 பேருந்துகள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளன. இந்தப் பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைப்பதாக இருந்தது.
இதற்காக சென்னை தீவுத்திடலில் இந்த பேருந்துகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த பேருந்துகளை நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேருந்துகளின் நிறம் மட்டுமின்றி, இருக்கை, அமரும் வசதி போன்றவை விரிவாக இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் சீரமைக்கப்பட்ட அரசு பேருந்துகளை முதல்வர் மு.க ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications