இப்படிலாம் கூட படிப்பு இருக்கா.. அதுவும் தமிழ்நாடு அரசு கல்லூரில! யுஜியில் தவில், நாதஸ்வரம் படிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசின் இசைக் கல்லூரியில் நாதஸ்வரம், தவில் பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளில் நாதஸ்வரம் மற்றும் தவில் ஆகிய பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்பு தொடங்கப்படுகிறது. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் அறிவித்து உள்ளார்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மற்றும் திருவையாறு ஆகிய இடங்களில் செயல்படும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளில் நாதஸ்வரம் மற்றும் தவில் பிரிவுகளில் பட்டயப்படிப்பு தொடங்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன் இ.ஆ.ப அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை பண்பாட்டுத் துறையின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயமுத்தூர் மற்றும் திருவையாறு ஆகிய இடங்களில் இசைக்கல்லூரிகள் செயல்படுகின்றன. இக்கல்லூரிகளில் இசை மற்றும் நாட்டிய பிரிவுகளில் மூன்றாண்டு பட்டயப்படிப்புகள் மற்றும் பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. குரலிசை, வயலின், வீணை மற்றும் பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்புகள் உள்ளன.
இவ்வாண்டு சட்டபேரவையில் சென்னை மற்றும் திருவையாறு அரசு இசைக்கல்லூரிகளில் நாதஸ்வரம் மற்றும் தவில் பிரிவுகளில் பட்டப்படிப்பு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சட்டமன்ற அறிவிப்பினை செயல்படுத்தும் வண்ணம் 2023-2024 கல்வியாண்டு முதல் நாதஸ்வரம், தவில் பிரிவுகளில் பட்டப்படிப்பு தொடங்கிட அரசாணை வெளியிடப்பட்டது.
சென்னை மற்றும் திருவையாறு இசைக் கல்லூரிகளில் நாதஸ்வரம் மற்றும் தவில் பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கு சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன. பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 17 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் சேரலாம். இப்பிரிவுகளில் சேர விரும்புவோர் கலை பண்பாட்டுத்துறையின் இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையத்தள முகவரி www.artandculture.tn.gov.in விண்ணப்பங்கள் 31.08.2023 மாலை வரை அளிக்கலாம்.
நேரில் விண்ணப்பம் அளிக்க விரும்புவோர் முதல்வர். தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலை . இராஜ அண்ணாமலைபுரம், சென்னை-600028 தொலைபேசி எண் 044-24937217 அல்லது முதல்வர், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி, திருவையாறு- தஞ்சாவூர் மாவட்டம்-613204, தொலைபேசி எண் 04362-261600 அணுகலாம்." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications